தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ் 48/18, த/பெ மலைராஜ், தஞ்சாவூர், 2) முருகானந்தம் 38/18, த/பெ ராஜா, புதுக்குடி, 3) துரைபாண்டி @ கார்த்திக் 24/18, த/பெ வடுகையன், வட்டக்கிணறு, தொண்டி ஆகியோர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.
இது குறித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
========++++=========++++=======