மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம் :- மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு படகுக்கும் அரசால் மாதம் தோறும் 1500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலுள்ள 10 இரும்பு படகுகளுக்கு மட்டும் மானிய டீசல் வழங்கப்படவில்லை. விசைப் படகுகளில் 10 படகுகள் இரும்பால் ஆன படகுகளாக உள்ளதால் அந்த படகுகளுக்கு மட்டும் அரசால் வழங்கப்பட்டு வரும் மானிய… Continue reading மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதி‌கலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.

இராமநாதபுரம் | செப் 27 - 2019 தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் உப்பூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி கொதி கலன்கள் அமைக்கும் பணிகளை பெல் (BHEL) நிறுவனம் துவங்கியுள்ளது. ₹12655 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2016 ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட உப்பூர் அனல் மின்நிலையப் பணிகளை 2019 டிசம்பர் மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மின் நிலையத்திற்கு 359… Continue reading உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதி‌கலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.

நவாஸ் கனி MP யுடன் மத்திய மந்திரி சந்திப்பு

இராமநாதபுரம் | செப் 25 மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர சிங் தாமோர் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். சந்திப்பின் போது இராமநாதபுரம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்கப் பெறவும், விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தும் வண்ணம் புதிய திட்டங்களை வகுக்கவும் வலியுறுத்தினார். தகவல் : MyThondi.Com Team

நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019

தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.

தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ்… Continue reading தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.

Thondi to Ramanathapuram Bus Timings

தொண்டியிலிருந்து நம்புதாளை ➡️ உப்பூர் ➡️ திருப்பாலைக்குடி ➡️ தேவிப்பட்டிணம் ➡️ வழியாக இராமநாதபுரம் 🚺⬆️🚹 சென்றடையும் பேருந்துகளின் கால அட்டவணை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு. தொண்டியிலிருந்து இராமநாதபுரம் வரை உள்ள ஊர்களில் உள்ளவர்கள் கீழே உள்ள வகையில் நிமிடங்களைக் கூட்டி கணக்கிட்டு கொள்ளலாம். நம்புதாளை - 5 நிமிடங்கள் மணக்குடி - 15 நிமிடங்கள் உப்பூர் - 20 - 25 நிமிடங்கள் திருப்பாலைக்குடி - 30 நிமிடங்கள் | தொண்டியில் நேரம் |… Continue reading Thondi to Ramanathapuram Bus Timings