தொண்டியில் உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் சிறப்பு தொழுகை

தொண்டி, ஆகஸ்ட் 8:உலகில் அமைதி நிலவவும், தென் மாவட்டங்களில் நீடித்து வரும் வறட்சி நிலை நீங்கி, போதிய மழை பெய்ய வேண்டியும் தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் இன்று (08.08.2026) காலை சிறப்பு திடல் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. தொண்டி மலுங்கு ஒலியுல்லா தர்கா திடலில் காலை 8 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, உலக அமைதி, மக்கள் நலன் மற்றும் மழை வேண்டி இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொண்டி மற்றும்… Continue reading தொண்டியில் உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் சிறப்பு தொழுகை

தொண்டி மக்களே தயாராகுங்கள்! மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026–27 தொடங்குகிறது – ஏன் இது அனைவருக்கும் முக்கியம்?

தொண்டி: நாட்டின் மிகப்பெரிய தரவு சேகரிப்பு நடவடிக்கையான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2027) முதல் கட்டப் பணிகள் 2026-ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளன. இந்த கணக்கெடுப்பு மூலம் ஒரு ஊரின் மக்கள் தொகை, வீடுகள், அடிப்படை வசதிகள், கல்வி, குடிநீர், கழிப்பறை, இணைய வசதி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. முதல் முறையாக டிஜிட்டல் முறையிலும் சுயப் பதிவு (Self Enumeration) வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொண்டியின் வளர்ச்சி – முந்தைய கணக்கெடுப்பு சொல்வது… Continue reading தொண்டி மக்களே தயாராகுங்கள்! மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026–27 தொடங்குகிறது – ஏன் இது அனைவருக்கும் முக்கியம்?

மதுரை → தொண்டி பேருந்து நேர அட்டவணை

(மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்) அதிகாலை (இரவு 01:00 AM – 6:59 AM) புறப்படும் நேரம் - பேருந்து வகை 01:20 - அரசுப் பேருந்து 03:50 - அரசுப் பேருந்து 04:50 - அரசுப் பேருந்து 05:10 - ஜெயவிலாஸ் 05:15 - அரசுப் பேருந்து 05:30 - அரசுப் பேருந்து 06:10 - அரசுப் பேருந்து 06:32 - அரசுப் பேருந்து 06:45 - அரசுப் பேருந்து காலை (07:00… Continue reading மதுரை → தொண்டி பேருந்து நேர அட்டவணை

மதுரை – தொண்டி நான்குவழிச் சாலை: தொண்டி துறைமுகக் கனவு நனவாகும் காலம் நெருங்குகிறதா?

தொண்டி:மதுரை – தொண்டி நான்குவழிச் சாலைத் திட்டத்திற்கு புதிய வேகம் கிடைத்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தொண்டி மக்களிடையே பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட துறைமுக மேம்பாட்டுத் திட்டம் மீண்டும் உயிர் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இருவழிச் சாலையாக உள்ள மதுரை – தொண்டி சாலை, நான்குவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டால், மதுரை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலிருந்து தொண்டியை விரைவாக அடைய முடியும். இது சரக்குப்… Continue reading மதுரை – தொண்டி நான்குவழிச் சாலை: தொண்டி துறைமுகக் கனவு நனவாகும் காலம் நெருங்குகிறதா?

பொதுமக்கள் புகார்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை – அவசர தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களின் குறைகள், புகார்கள் மற்றும் அவசரகால தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை (District Control Room) செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், புகார்கள், இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்கள் மற்றும் பிற அவசர நிலை குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்காக கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன:83001 7588886673 6789786087 7675679042 71774பொதுமக்கள் அவசர… Continue reading பொதுமக்கள் புகார்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை – அவசர தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 700 மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் தீர்வு

இராமநாதபுரம், ஜூலை 20:இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. மா. சிவகுரு பிரபாகரன், I.A.S. தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 700 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு… Continue reading மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 700 மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் தீர்வு

தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தொண்டி, ஜூலை 16:இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று (16.07.2026) காலை 11.00 மணியளவில் தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொண்டி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இணைந்து பங்கேற்றனர்.தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய… Continue reading தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தொண்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு; மக்கள் கடும் அவதி

தொண்டி, ஜூலை 16:தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி பெண்கள் இன்று (16.07.2026) காலை 10.00 மணியளவில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கடந்த பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோதும், குழாய் மூலம் சீரான… Continue reading தொண்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு; மக்கள் கடும் அவதி

தொண்டியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆய்வு

தொண்டி, ஜூலை 15:இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன், I.A.S., இன்று "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டத்தை திருவாடானையில் தொடங்கி வைத்து, அதன் பின்னர் தொண்டி நகருக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர். பேருந்து நிலையத்தில் ஆய்வுதொண்டி… Continue reading தொண்டியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆய்வு

தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விழா

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விழா: பொறியாளர் எம்.எம். அபூபக்கருக்கு விருது வழங்கி கௌரவம்!வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டி மாநகரில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துமத தர்ம பரிபாலன சபையின் சார்பில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (18.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்நிகழ்வில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து இந்து கிராமத்… Continue reading தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விழா