தேவகோட்டையில் வாகன பிரச்சாரம்

தேவகோட்டை | செப் 29 - 2019 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்வழி கல்வியை ஊக்குவிப்போம், மூடிய பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்துவோம், அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டலம் சார்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்வி உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் தேவகோட்டை ஒத்தக்கடை வந்தது. அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் சென்று தியாகிகள் பூங்கா அருகே தமிழ்வழி கல்வி பாதுகாப்பு குறித்த பிரசாரம்… Continue reading தேவகோட்டையில் வாகன பிரச்சாரம்

Advertisements

நீங்கள் SBI வாடிக்கையாளரா ? இது உங்களுக்கு தான்.

ஆன்லைன் மூலம் வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து இந்திய பொதுத் துறை வங்கிகள் பலவும், பாதுகாப்பு அம்சங்களையும் தீவிரப்படுத்தியுள்ளன. அதே வகையில், எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை விஷயங்களை வெளியிட்டு வருகிறது. அதாவது, வங்கிக் கணக்குகள் பல்வேறு வகைகளில் மோசடியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வங்கியில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்கள், புகார்களை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் போது… Continue reading நீங்கள் SBI வாடிக்கையாளரா ? இது உங்களுக்கு தான்.

உலகில் இஸ்லாம் என்ற மதம் மட்டுமே உள்ளது. – இம்ரான் கான் பேச்சு

எந்த மதத்தையும் தீவிரவாதத்தோடு இணைத்துப் பேசாதீர்கள், உலகில் இஸ்லாம் என்று ஒரு மதம் மட்டுமே இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். ஐ.நா. சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக 7 நாட்கள் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இறுதியாக நேற்று ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சில் பாகிஸ்தான் குறித்து எந்தவிதமான நேரடியான தாக்குதலும்,… Continue reading உலகில் இஸ்லாம் என்ற மதம் மட்டுமே உள்ளது. – இம்ரான் கான் பேச்சு

முட்டை ஆரோக்கியமா ஆபத்தா ?? – ஆரோக்கியம்

ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்படுகிறது. எனவே அது அதிக சத்துகள் கொண்டதாக உள்ளது,'' என்கிறார் அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து அறிவியல் துறை அசோசியேட் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் பிளெஸ்ஸோ. மற்ற உணவுகளுடன் சேர்த்து முட்டை சாப்பிடும்போது, அதிக வைட்டமின்களை நமது உடல்… Continue reading முட்டை ஆரோக்கியமா ஆபத்தா ?? – ஆரோக்கியம்

கீழடியில் அருங்காட்சியகம்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் க. பாண்டியராஜன், "கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, இந்திய… Continue reading கீழடியில் அருங்காட்சியகம்.

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.

இராமநாதபுரம் | செப் 28 -2019 வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை *********************************************************************** கடந்த 2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது… Continue reading வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.

இதயமே நலமா ?? – மருத்துவம்

மருத்துவ விகடன் இதழில் வெளிவந்த கட்டுரை. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள் என்பதால் My Thondi.Com மறு பதிப்பு செய்கிறது. மனித உடலுக்குக் கொழுப்புச்சத்து தேவையானது; முக்கியமானது. ஆனால், அதன் அளவு கொஞ்சம் அதிகமானாலும் உடலுக்கு ஏற்படுவது பிரச்னை. கொழுப்புச்சத்தில் எத்தனை வகைகள் இருக்கின்றன, உடலிலிருக்கும் அதன் அளவை எப்படித் தெரிந்துகொள்வது, எத்தனை நாளைக்கு ஒருமுறை அதன் அளவைப் பரிசோதிக்க வேண்டும், அது அதிகரிக்க என்ன காரணம், உணவுப்பழக்கத்தை மாற்றுவதால் அதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்… ஏ… Continue reading இதயமே நலமா ?? – மருத்துவம்

ஹேப்பி பர்த் டே கூகுள்

இணைய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான கூகுள் நிறுவனம் தனது 21 வது பிறந்த நாளை இன்று (27-09-2019) கொண்டாடுகிறது. இதற்கென தனியான டூடுள் படத்தையும் அது வெளியிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட கூகுள் நிறுவனம் உலகின் அதிக வருமானம் ஈட்டும் இணைய நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் இணைய தளம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாட்களைக் கொண்டுள்ளது. ஹேப்பி பர்த்டே கூகுள். தொகுப்பு My Thondi.Com Team

உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதி‌கலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.

இராமநாதபுரம் | செப் 27 - 2019 தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் உப்பூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி கொதி கலன்கள் அமைக்கும் பணிகளை பெல் (BHEL) நிறுவனம் துவங்கியுள்ளது. ₹12655 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2016 ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட உப்பூர் அனல் மின்நிலையப் பணிகளை 2019 டிசம்பர் மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மின் நிலையத்திற்கு 359… Continue reading உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதி‌கலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.

கீழடி சாதனை நாயகி – கனிமொழி மதி

சென்னை | செப் 27 - 2019 இன்று கீழடி நாகரிகம் பற்றி உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுகாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்க வழி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி. இந்தியத் தொல்லியல் துறை நடத்தி வந்த கீழடி… Continue reading கீழடி சாதனை நாயகி – கனிமொழி மதி