தொண்டி, ஆகஸ்ட் 8:
உலகில் அமைதி நிலவவும், தென் மாவட்டங்களில் நீடித்து வரும் வறட்சி நிலை நீங்கி, போதிய மழை பெய்ய வேண்டியும் தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் இன்று (08.08.2026) காலை சிறப்பு திடல் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

தொண்டி மலுங்கு ஒலியுல்லா தர்கா திடலில் காலை 8 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, உலக அமைதி, மக்கள் நலன் மற்றும் மழை வேண்டி இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வறட்சி நிலை நீங்கி, விவசாயம் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் சிறக்கவும், போதிய மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பவும் பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் மற்றும் அமைதியின்மை முடிவுக்கு வந்து, மக்கள் அனைவரும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனையில் வேண்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையிலும் பிரார்த்தனையிலும் பங்கேற்றனர்.
– MYTHONDI.COM | தொண்டியின் புதிய அடையாளம்