புதுடெல்லி: ரயில்வே துறை, டிக்கெட் முன்பதிவு காலத்தை 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இந்த புதிய விதிமுறை நவம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது. முக்கிய குறிப்பு: அக்டோபர் 31, 2024க்கு முன்பு 120 நாட்கள் முன்பதிவு காலத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாற்றம், ரயில்களில் இடத்தை அதிகரித்து, பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.மேலும் விவரங்களுக்கு:
Month: October 2024
அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்
இராமேஸ்வரம்: இந்தியாவின் மகத்தான விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 93-வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இராமேஸ்வரம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மினி மாரத்தான் போட்டி துவங்கி வைக்கப்பட்டது. இப்போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு… Continue reading அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்
தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்
தொண்டி: தொண்டி பேரூராட்சித் துணைத்தலைவர் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பான சம்பவம் தொண்டியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தொண்டியில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியினர், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால் ஏற்பட்ட விவகாரத்தில், ராஜேந்திரன் நாம் தமிழர் கட்சியினருடன் தொலைபேசி வழியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் ஹிந்து பரிபாலன சபை குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திரன்… Continue reading தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்
தொண்டி பகுதியில் BSNL நெட்வொர்க் தடை: வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற எண்ணம்
தொண்டி பகுதியில் பல நாட்களாக BSNL நெட்வொர்க் சேவை முழுமையாக செயலிழந்து இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் தினசரி தொடர்புகளிலும், தொழில் சார்ந்த பணிகளிலும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, பி.எஸ்.என்.எல். சொத்துகள் நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்யப்பட்டதால், இந்த நெட்வொர்க் பிரச்சினை உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்இந்த நெட்வொர்க் தடையின் காரணமாக, வாடிக்கையாளர்கள் இன்றியமையாத தொலைபேசி அழைப்புகளையும், இணைய சேவையையும் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். வேலையுடன் தொடர்புடைய மற்றும் தனிப்பட்ட… Continue reading தொண்டி பகுதியில் BSNL நெட்வொர்க் தடை: வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற எண்ணம்