பொதுமக்கள் புகார்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை – அவசர தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களின் குறைகள், புகார்கள் மற்றும் அவசரகால தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை (District Control Room) செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், புகார்கள், இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்கள் மற்றும் பிற அவசர நிலை குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்காக கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன:83001 7588886673 6789786087 7675679042 71774பொதுமக்கள் அவசர… Continue reading பொதுமக்கள் புகார்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை – அவசர தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 700 மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் தீர்வு

இராமநாதபுரம், ஜூலை 20:இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. மா. சிவகுரு பிரபாகரன், I.A.S. தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 700 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு… Continue reading மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 700 மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் தீர்வு

தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தொண்டி, ஜூலை 16:இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று (16.07.2026) காலை 11.00 மணியளவில் தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொண்டி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இணைந்து பங்கேற்றனர்.தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய… Continue reading தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தொண்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு; மக்கள் கடும் அவதி

தொண்டி, ஜூலை 16:தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி பெண்கள் இன்று (16.07.2026) காலை 10.00 மணியளவில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கடந்த பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோதும், குழாய் மூலம் சீரான… Continue reading தொண்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு; மக்கள் கடும் அவதி

தொண்டியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆய்வு

தொண்டி, ஜூலை 15:இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன், I.A.S., இன்று "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டத்தை திருவாடானையில் தொடங்கி வைத்து, அதன் பின்னர் தொண்டி நகருக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர். பேருந்து நிலையத்தில் ஆய்வுதொண்டி… Continue reading தொண்டியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆய்வு

ரயில்வே முன்பதிவு காலம் குறைப்பு: முக்கிய அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே துறை, டிக்கெட் முன்பதிவு காலத்தை 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இந்த புதிய விதிமுறை நவம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது. முக்கிய குறிப்பு: அக்டோபர் 31, 2024க்கு முன்பு 120 நாட்கள் முன்பதிவு காலத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாற்றம், ரயில்களில் இடத்தை அதிகரித்து, பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.மேலும் விவரங்களுக்கு:

அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்

இராமேஸ்வரம்: இந்தியாவின் மகத்தான விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 93-வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இராமேஸ்வரம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மினி மாரத்தான் போட்டி துவங்கி வைக்கப்பட்டது. இப்போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு… Continue reading அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்

தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்

தொண்டி: தொண்டி பேரூராட்சித் துணைத்தலைவர் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பான சம்பவம் தொண்டியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தொண்டியில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியினர், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால் ஏற்பட்ட விவகாரத்தில், ராஜேந்திரன் நாம் தமிழர் கட்சியினருடன் தொலைபேசி வழியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் ஹிந்து பரிபாலன சபை குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திரன்… Continue reading தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் இன்று (11.10.2019) இரண்டு பயணிகளிடமிருந்து, 973 கிராம் எடையுள்ள ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். கொழும்பிலிருந்து வந்த விமானம் ஒன்றில் பயணம் செய்த சிவக்குமார் பழனியாண்டி என்பவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து 525 கிராம் எடையுள்ள ரூ.19.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கையிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த… Continue reading சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ஜியோ வைத்த அடுத்த ஆப்பு.

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்கிற மாதிரி கொடுத்து விட்டு பின்னால் அதற்கு வசூல் செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் தெரிந்தும் அதில் மாட்டிக்கொள்வது தான் நமது மக்களின் பழக்கமாகும். ஜியோ நிறுவனம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, முதலில் சிம் கார்டுகளை இலவசமாக கொடுத்தனர். 4G அமைப்புடன் வந்த இந்த சிம் கார்டுகளால் 4G தரம் கொண்ட… Continue reading ஜியோ வைத்த அடுத்த ஆப்பு.