(மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்) அதிகாலை (இரவு 01:00 AM – 6:59 AM) புறப்படும் நேரம் - பேருந்து வகை 01:20 - அரசுப் பேருந்து 03:50 - அரசுப் பேருந்து 04:50 - அரசுப் பேருந்து 05:10 - ஜெயவிலாஸ் 05:15 - அரசுப் பேருந்து 05:30 - அரசுப் பேருந்து 06:10 - அரசுப் பேருந்து 06:32 - அரசுப் பேருந்து 06:45 - அரசுப் பேருந்து காலை (07:00… Continue reading மதுரை → தொண்டி பேருந்து நேர அட்டவணை
Tag: Thondi News
தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்
தொண்டி: தொண்டி பேரூராட்சித் துணைத்தலைவர் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பான சம்பவம் தொண்டியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தொண்டியில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியினர், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால் ஏற்பட்ட விவகாரத்தில், ராஜேந்திரன் நாம் தமிழர் கட்சியினருடன் தொலைபேசி வழியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் ஹிந்து பரிபாலன சபை குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திரன்… Continue reading தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்
தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
தொண்டி - 24/02/2019 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டி கிளை சார்பாக மழை வேண்டி சிறப்புத் தொழுகை தொண்டி - வெள்ளை மணல் தெருவிலுள்ள தவ்ஹீத் திடலில் 24-02-2019 ஞாயிறு காலை 7:15 மணிக்கு நடைபெற்றது! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! என அல்லாஹ்விடத்திலே கேட்டு பிரார்த்தனை செய்து பின்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து… Continue reading தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
ஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.
தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்
நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019
தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.
தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ்… Continue reading தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.
தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?
தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !? நமது தொண்டியில் கடந்த செவ்வாய் முதல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் INDIA1™ என்ற பெயரில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கி உள்ளது. ஏற்கனவே நமது தொண்டியில் ஐந்து (பணமே இருக்காத) ஏடிஎம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வங்கிகளோடு இணைந்தே உள்ளன. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏடிஎம் எந்த வங்கியோடும் இணைந்தது அல்ல..!! அப்படியானால் இது பாதுகாப்பானதா… Continue reading தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?
தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி. தொண்டியில் புதிய ஏடிஎம்(ATM) உதயம். தொண்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் புதிதாக இன்று 28-11-2018 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது * இந்தியா1 ஏடிஎம். இந்த ATM மெஷினின் பயன்பாடுகள்: ⏰24 மணி நேர சேவை 💳 அனைத்து வங்கி ATM கார்டுகளையும் பயன்படுத்தலாம். 💳 பணம் எடுப்பதற்க்கும் ,வங்கி இருப்பித் தொகை சரிபார்ப்பதற்கும் உபயோகிக்கலாம். 💳ஒரு முறை பரிவர்த்தனையில் ரூ.100… Continue reading தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.
கஜா புயல் எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 15ஆம் தேதி நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ============++++=========== செய்தி : MyThondi.Com Team 🖊📝
நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.
தொண்டி | செப்டம்பர் 15 தொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக தொண்டி பெரிய பள்ளிவாசலில் சிறப்பு மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் மௌலானா அப்துல் ஜப்பார் யூசுஃபீ அவர்கள் தலைமை வகித்தார்கள். தொண்டி அனைத்து தெரு ஜமாஅத்துகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொண்டி நயீமிய்யா அரபுக் கல்லூரி மாணவர் R. முஹம்மது அப்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.… Continue reading நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.