திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடையில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளை போட்டு 28 கிலோ தங்க நகைகளை திருடப்பட்டது.இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து திருடிய வீடியோக்கள் வெளியாகிய நிலையில் கொள்ளை நடந்த 48 மணிநேரத்தில் கொள்ளையர்களை திருவாரூர் பகுதியில் வாகனசோதனையின் போது டூவிலரில் சென்று கொண்டிருந்த இருவரை மறித்த போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டுள்ளான்.மற்றொரு திருடன் சுரேஸ் தப்பியோடினார். மணிகண்டனை பிடித்த போது அவனிடம் இருந்த மூட்டையில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது. அந்த… Continue reading லலிதா ஜுவல்லரி திருட்டின் பலே கில்லாடி | யார் இந்த திருவாரூர் முருகன் ?
Tag: செய்திகள்
நீங்கள் SBI வாடிக்கையாளரா ? இது உங்களுக்கு தான்.
ஆன்லைன் மூலம் வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து இந்திய பொதுத் துறை வங்கிகள் பலவும், பாதுகாப்பு அம்சங்களையும் தீவிரப்படுத்தியுள்ளன. அதே வகையில், எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை விஷயங்களை வெளியிட்டு வருகிறது. அதாவது, வங்கிக் கணக்குகள் பல்வேறு வகைகளில் மோசடியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வங்கியில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்கள், புகார்களை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் போது… Continue reading நீங்கள் SBI வாடிக்கையாளரா ? இது உங்களுக்கு தான்.
புதிய ரக நெல் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் இன்று (26.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் TDCM-1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வைத்து, விதை விதைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொகுப்பு My Thondi.Com Team
விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:– மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு… Continue reading விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்
இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளத்தில் சங்க கால நாகரீகத்தின் 13000 எச்சங்கள் காணப்படுகின்றன. கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அழகன்குளம் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. வைகை நதி கடலில் கலக்கும் இக்கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட… Continue reading இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்
எங்களை வஞ்சித்து விட்டீர்கள் – உலகத் தலைவர்களை விளாசித் தள்ளிய மாணவி.
ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார். நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா. யார் இந்த கிரெட்டா ? கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி. சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு… Continue reading எங்களை வஞ்சித்து விட்டீர்கள் – உலகத் தலைவர்களை விளாசித் தள்ளிய மாணவி.
நவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு K.நவாஸ் கனி MP அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நம்முடைய மீனவர்களின் நிலை குறித்து விவாதித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.. ------------------------------------------------------------------------ அன்பார்ந்த இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சொந்தங்களே.., என்னுடைய தேர்தல் வாக்குறுதியில் முக்கிய பிரச்சனையாக மூன்றை முன்னிலைப்படுத்தியிருந்தோம். அதில் முதன்மையாக நம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை. அது குறித்து பல்வேறு கோணங்களில்… Continue reading நவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.
தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
தொண்டி - 24/02/2019 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டி கிளை சார்பாக மழை வேண்டி சிறப்புத் தொழுகை தொண்டி - வெள்ளை மணல் தெருவிலுள்ள தவ்ஹீத் திடலில் 24-02-2019 ஞாயிறு காலை 7:15 மணிக்கு நடைபெற்றது! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! என அல்லாஹ்விடத்திலே கேட்டு பிரார்த்தனை செய்து பின்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து… Continue reading தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
ஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.
தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்
நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019