
தொண்டி | 10-12-2018
கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது.
பலர் வீடுகளை இழந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.
எனவே டெல்டா பகுதிகளை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நமது தொண்டியில் இருந்தும் அனைத்து ஜமாஅத்துகளின் கூட்டமைப்பான ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் நிவாரண நிதி மக்களிடம் வசூல் செய்யப்பட்டது.
அந்த வகையில் கடந்த 05-12-2018 மற்றும் 07-12-2018 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களில் சுமார் இருபது இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நிவாரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.