பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 3

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 3

===========================

Episode 03: பயணம் ஆரம்பம்

ஆரம்பிக்கப்படும் இந்த ஆய்வுப் பயணம் சமயங்களில் ஷைத்தானின் சாம்ராஜ்யத்தினூடு பயணிப்பதாகவும், மற்றும், பல அமானுஷ்ய உண்மைகளைத் தர்க்கரீதியாக அலசுவதாகவும் இருக்கும்.

ஷைத்தானின் சாம்ராஜ்ஜியத்தினூடு பயணிக்கப் போவதாக சொன்னவுடன் சிலரது உள்ளத்தில் ஒரு தயக்கம் ஏற்படலாம். அல்லாஹ்வின் இறை வேதத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் வரை எந்தக் குழப்பத்துக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயெ இன்றைய உலகைச் சூழ்ந்துள்ள ஒருசில குழப்பங்களை இங்கு அலசப் போகிறோம்.
இன்றைய உலகம் அறிவீனத்திலும், முட்டாள் தனத்திலுமே மூழ்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கிறது:
மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலக்கட்டம் வரும்.
அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும். (புகாரி 7066)
இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் தற்கால உலகில் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒருசில அறிவீனங்களை இங்கு பட்டியலிட்டுக் காட்டலாமென நினைக்கிறேன்:
முதலாவது அறிவீனம்:
“நமக்கு முன் இந்த உலகில் வாழ்ந்து மறைந்த எல்லா சமுதாயங்களையும் விட அறிவிலும், நாகரீகத்திலும் நாம் தான் பலமடங்கு முன்னேறி இருக்கிறோம்” என்ற ஒரு நினைப்பில் இன்று நம்மில் அனேகமானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருக்கும் அறிவீனங்களிலேயே இந்த ஒரு நினைப்பை விட மாபெரும் அறிவீனம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மை இதற்கு மாற்றமானது.
நமக்கு முன்சென்ற பல சமுதாயங்களை விட உண்மையில் நாம் இன்று அறிவில் பிந்தங்கிய நிலையில் தான் இருக்கிறோம். தொழிநுட்பம் எனும் ஒரேயொரு முன்னேற்றத்தைத் தவிர சிந்தனை சார்ந்த அறிவின் பல அம்சங்களில் நம்மில் அனேகமானோர் இன்று சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவை விடக் குறைவான அறிவோடு தான் இருக்கிறோம்.
இரண்டாவது அறிவீனம்:
ஒருசில அசாதாரண நிமிடங்களைத் தவிர ஏனைய பொழுதுகளிலெல்லாம் நமது உள்ளம் நமது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று நம்மில் அனேகமானோர் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதாவது நாம் எதை நினைக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மாணிக்கிறோம் என்ற ஒரு நினைப்பிலேயே நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகுத்தறிவின் மீது கொண்ட அதீத நம்பிக்கையின் விளைவு தான் இந்த அறிவீனம். “என் பகுத்தறிவை மீறி என் மூளை என்ன தான் செய்து விடப் போகிறது?” என்ற இந்த அசட்டு தைரியம் தான் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் நம்மை மீறிய பல நிகழ்வுகள் மீது கவனம் செலுத்த விடாமல் நம் அறிவுக் கண்ணை மறைக்கிறது.
உண்மை என்னவென்றால், நம் அன்றாட வாழ்வின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம் உள்ளமும், சிந்தனையும், தீர்மானங்களும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. இந்த உண்மையை அலசும் விதமாகத் தான் இந்த ஆய்வின் முதல் கட்டம் ஆரம்பிக்கிறது.
அனேகமான மனிதர்களிடம் சுவாரசியமான ஒரு சுபாவத்தை நீங்கள் அவதானிக்கலாம்., என்ன தான் முயற்சி செய்தாலும், சிலரிடம் உண்மை / சத்தியம் எடுபடுவதில்லை. என்ன தான் காரண காரியங்களுடன் தர்க்க ரீதியாக விளக்கினாலும், கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் உண்மையை உணர்த்திக் காட்டினாலும், அதை அவர்களது உள்ளம் சரிகாண்பதில்லை. ஆரம்பத்தில் வைத்த அதே வாதங்களையே திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறானவர்களைப் பார்த்து நாம் என்ன சொல்வோம்? “இவரது மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறது” என்போம்.
ஆனால், இதை விட எளிய நடையில் இதை இப்படி சொல்லலாம்:
“இவரது சிந்தனை இவர் கட்டுப்பாட்டில் இல்லை. யாரோ ஒருவர் இவரது சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். இவரது பகுத்தறிவைக் கட்டிப் போட்டு, இவரை ஒரு கருவியாக உபயோகித்து, யாரோ ஒருவர் தனது நோக்கத்தை இவர் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.”
மூளைச்சலவை என்பதன் அர்த்தமே இது தான்.
இந்தக் கோணத்தில் இந்த உண்மையை விளங்கும் போது, இதுவரை நம் கண்ணுக்குப் புலப்படாமலிருந்த ஒரு பேருண்மை பளிச்சென்று புலப்படும். ஒருவர் மூளையை / சிந்தனையை இன்னொருவர் ஆக்கிரமிப்பது என்பது ஒன்றும் கடினமான காரியமல்ல என்பதை ஒத்துக் கொள்வதற்கு இது ஒன்றே போதும். இதே அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு இனி விடயத்துக்கு வருவோம்.
சத்தியப் பிரச்சாரங்களை நாம்மில் பலர் எடுத்த எடுப்பில் மறுப்பதற்கும், தர்க்க ரீதியான வாதங்கள் மூலம் ஒரு விடயம் நிரூபிக்கப் பட்டாலும், அதைக் கண்டுகொள்ளாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்வதற்கும் காரணம்… நம்மில் பலரது சிந்தனை நம் கட்டுப்பாட்டில் இருப்பதற்குப் பதிலாக, ஷைத்தானின் கட்டுப்பாட்டில் இருப்பது தான்.
பல நூறு திட்டங்கள் மூலம் மனித உள்ளத்தை ஷைத்தான் ஆக்கிரமிப்பதன் நோக்கம் ஒன்றேயொன்று தான்; மனிதன் சிந்திக்கக் கூடாது. மனிதனை சுதந்திரமாகச் சிந்திக்க விட்டால், மனித இனத்தை அடியோடு வேரறுக்கும் தனது திட்டம் தவிடுபொடியாகி விடும். எனவே, தனது சக்திக்கு உட்பட்ட எல்லா விதங்களிலும் மனிதனை சுயமாகச் சிந்திக்காதவனாக வைத்துக் கொள்ளவே ஷைத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். இதை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் பின்வரும் ஆதாரங்கள் அமைந்துள்ளன:
ஆதாரம் 1:
மனிதர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தை விதைத்து விடுவான் . (புகாரி 2035)
ஆதாரம் 2:
“என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” எனவும் கூறினான்.
“நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி” என்று (இறைவன்) கூறினான்.
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! அவர்களது பொருட்செல்வங்களிலும், குழந்தைச் செல்வங்களிலும் அவர்களுடன் நீ பங்காளி ஆகிக்கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. – (அல் குர்ஆன் – 17:62-64)
இந்த ஆதாரங்கள் மூலம் ஒரு விடயம் தெளிவாகப் புலப்படுகிறது. ஷைத்தானுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆற்றல், மற்றும் அதிகாரம் என்பது உள்ளத்தில் ஏற்படுத்தும் ஊசலாட்டத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அதையும் தாண்டிய அதிகாரைம் சைத்தானுக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்பது இந்த வசனங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இங்கு ஷைத்தான் அல்லாஹ்வைப் பார்த்து “மனிதனை வழிகெடுப்பேன்” என்று மட்டும் சொல்லவில்லை. “சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” என்று சவால் விடுகிறான். உள்ளத்தில் ஊசலாட்டத்தை உண்டுபன்னி ஒரு மனிதனை வழிகெடுப்பதற்கும், அவனை வேரறுப்பதற்கும் இடயில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
ஒருவனை நேர்வழியிலிருந்து திசைதிருப்பி விட்டாலே போதும்; வழிகெடுத்தல் எனும் காரியம் அத்தோடு நிறைவடைந்து விடும். ஆனால், அத்தோடு மட்டும் நின்று விடாமல், கிடைக்கப் பெறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒருவனது வாழ்க்கையை எல்லாத் துறைகளிலும் சின்னாபின்னமாக்குவதையே வேரறுத்தல் என்ற சொல் குறிக்கும். ஒருவன் மீது ஜன்மப் பகையும், வைராக்கியமும் எவனது உள்ளத்தில் குடிகொண்டிருக்குமோ, அவனுக்குத் தான் வேரறுக்க வேண்டும் என்ற தேவை இருக்கும்.
மனித இனத்தின் மீது தீராத பகையும், மாறாத வைராக்கியமும் பூண்ட ஒரே எதிரி ஷைத்தான் தான். இதைத் தான் பின்வரும் குர்ஆன் வசனம் சொல்லிக் காட்டுகிறது:
ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! (35:6)
தீராத பகை உணர்வோடு மனிதனை ஈருலகிலும் அழிக்கத் துடிக்கும் ஒரே எதிரி ஷைத்தான் என்பதால் தான், எம்மை வேரறுக்கும் தேவை அவனுக்கு இருக்கிறது. எனவே தான், “இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” என்று அல்லாஹ்விடமே சவால் விட்டான்.
அவனது திட்டம், உள்ளத்தில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனிதனை வழிகெடுப்பது மட்டுமல்ல; ஈருலகிலும் மனிதனை நிம்மதியாக வாழ விடவே கூடாது; சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்திலெல்லாம் மனிதனை எல்லா விதங்களிலும் சின்னாபின்னமாக்க வேண்டும் என்பதும் தான் அவனது திட்டம். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவனது சவாலுக்கு அல்லாஹ் கூறிய பதிலும் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
வழிகெடுப்பது மட்டும் தான் ஷைத்தானின் நோக்கமாக இருந்திருந்தால், “உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்!” என்று ஷைத்தானுக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே போதுமானது; அந்த அனுமதியோடு அல்லாஹ் நிறுத்தியிருப்பான். ஆனால், அத்தோடு நிறுத்தவில்லை; அதைத் தொடர்ந்து மேலதிகமாக, “உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கெதிராக ஏவிக்கொள்; அவர்களது பொருட்செல்வங்களிலும், குழந்தைச் செல்வங்களிலும் அவர்களோடு நீ பங்காளி ஆகிக்கொள்…” என்றெல்லாம் அவனுக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரங்களை அல்லாஹ் இங்கு பட்டியலிட்டுக் காட்டுகிறான்.
உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் வழிகெடுக்கும் ஒருவனுக்குக் காலாட்படையும், குதிரைப் படையும், செல்வத்தின் பலமும் வழங்கப்படுவதில் அர்த்தமிருக்காது. இங்கு அல்லாஹ் குறிப்பிடுவது, ஆள் பலம், பொருளாதார வளம், இராணுவ பலம் என்று ஓர் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டிய அத்தனை அதிகாரங்களையும் தான்.
ஆகவே இதன் மூலம், ஷைத்தானின் திட்டம் வழிகெடுப்பது மட்டுமல்ல; அடியோடு மனிதனை வேரறுப்பது என்பதுவும், ஷைத்தானுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆற்றல், அதிகாரங்கள் என்பது உள்ளத்தில் உணர்வுகளைத் தூண்டுவதோடு மட்டுப்படுத்தப் பட்டதல்ல; அதையும் தாண்டியது என்பதுவும் மறுக்க முடியாதவாறு நிரூபணமாகிறது.
ஹிதாயத் (நேர்வழி) என்பது வேறொன்றுமல்ல; ஷைத்தானின் இந்த ஆதிக்கச் சிறையிலிருந்து அல்லாஹ் நமது உள்ளத்துக்கு வழங்கும் விடுதலை தான். ஹிதாயத் என்னும் இந்த விடுதலை கிடைத்தால் மட்டுமே நமது சிந்தனை சுதந்திரமாக வேலை செய்யும். இந்தச் சுதந்திரம் நமது மூளைக்குக் கிடைத்தால் மட்டுமே, சரியான அடிப்படையில் நம்மால் சிந்தித்து செயலாற்ற முடியும்.
எந்தவொரு மனிதனுக்கும் அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்ல. அதனால், மனித வாழ்வின் முதல் அத்தியாயத்தையே அல்லாஹ் ஹிதாயத்தோடு தான் ஆரம்பித்து வைக்கிறான்.
ஆதாரம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1385
ஒவ்வொரு குழந்தையும் ஹிதாயத்தோடு முஸ்லிமாகவே பிறக்கிறது என்பதை மேலுள்ள ஹதீஸ் அழகாக உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு சுதந்திரமாகப் பிறக்கும் மனிதனை, அவன் பிறந்த அடுத்த கணமே அவனது பரம எதிரியான ஷைத்தான் வந்து கவ்விப் பிடித்துக்கொள்கிறான்; அந்த நிமிடத்திலிருந்து தனது இருள் சிறையில் அந்த மனிதனை அடைத்து வைக்கத் தேவையான தனது செயல்திட்டங்களை ஆரம்பித்து விடுகிறான். இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்திக் காட்டுகிறது:
பிறக்கும் குழந்தை எதுவாயினும் பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4548)
இந்த ஹதீஸ் மூலம் சில உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. அதாவது, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் ஷைத்தான் தீண்டுகிறான் என்பதை இந்த ஹதீஸ் இலக்கியமான அர்த்தத்தில் கூறவில்லை. மாறாக ஷைத்தான் எனும் ஜின், அந்தக் குழந்தையைத் தனது கைகளால் பிடிப்பதையே இந்த ஹதீஸ் பச்சையாகச் சொல்கிறது. ஷைத்தானின் பிடியின் வேதனை தாங்க முடியாமல் தான் ஒவ்வொரு மனிதக் குழந்தையும் இவ்வுலகில் தனது முதலாவது அழுகையை வீரிட்டு அழுகிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
இவ்வாறு பிறப்பிலேயே ஷைத்தான் வந்து பிடிக்கும் இந்தப் பிடியை, அந்த மனிதனது ஆயுள் உள்ளவரை ஷைத்தான் விடவே மாட்டான். தன்னால் முடியும் போதெல்லாம், தனது பிடியை இன்னும் இறுக்கத் தான் முயற்சிப்பான். அந்தக் குழந்தை வளர வளர, அதன் பெற்றோரின் வளர்ப்புக்கு ஏற்ப ஷைத்தானின் பிடி இறுகும்; அல்லது தளறும். ஷைத்தானின் இருள் சிறையின் ஆரம்பம் இது தான்.
இந்தச் சிறையிலிருந்து அந்த மனிதனது உள்ளத்தை விடுதலை செய்யும் சக்தி அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. ஆனால் இந்த விடுதலையை அல்லாஹ் எல்லோருக்கும் ஒரேமாதிரி வழங்கி விடுவதில்லை. தன்னை நேர்வழியில் செலுத்துமாறு அந்த மனிதன் தன்னிடம் பிரார்த்திக்க வேண்டுமென்று எதிர்பார்த்து அல்லாஹ் காத்திருப்பான். தன்னை மட்டுமே கடவுளாக ஏற்றுத் தன்னிடம் நேர்வழிக்காகப் பிரார்த்திக்க மாட்டானா என்று அல்லாஹ் ஆவலோடு காத்திருப்பான்.
பிரார்த்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும் அல்லாஹ்வே ஏற்படுத்தியும் கொடுக்கிறான். குறைந்தது ஒரு நாளைக்கு 17 சந்தர்ப்பங்களை ஐவேளைத் தொழுகையில் ஓதப்படும் ஸூரத்துல் பாத்திஹா மூலம் அல்லாஹ் வழங்குகிறான். “யா அல்லாஹ் என்னை நேரான பாதையில் செலுத்துவாயாக” என்று அவனிடம் உளமாற உதவி கேட்பதற்கு வாய்ப்பையும் அவனே கொடுத்து, அன்போடு உதவக் காத்திருக்கிறான்.
வாய்ப்பைப் பயன்படுத்தி, வாய் விட்டு அவனிடம் மனப்பூர்வமாக உதவி கோரினால் போதும்; ஷைத்தானின் சிறைக் கதவுகளை உடைத்தெறிந்து, அந்த மனிதனின் உள்ளத்திற்கு மீண்டும் அல்லாஹ் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கிறான். விடுதலை கிடைத்த அடுத்த கணமே, அவனது மனக் கண் திறக்கும். இதற்கு முன் புலப்படாதிருந்த சத்தியப் பாதை தெளிவாகப் புலப்படத் தொடங்கும். அதன் பிறகு, அந்த நேரான பாதையில் எப்படி நடப்பது? எவ்வளவு தூரம் நடப்பது என்பதை அந்த மனிதனே தீர்மானித்துக் கொள்ளட்டுமென்று அல்லாஹ் சுதந்திரமாக விட்டு விடுகிறான்.
அதே நேரம், நேர்வழிக்காகப் பிரார்த்திப்பதற்காகவேனும் ஒரு மனிதன் அல்லாஹ்வின் பால் ஒரு கணம் கூடத் திரும்பவில்லையென்றால், அவன் காலத்துக்கும் குருடனாகிறான்; ஷைத்தானின் பூரண கைப்பாவையாகவே வாழ்ந்து, முடிவில் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுகிறான்.
நேர்வழியைக் காட்டுவதென்பது ஓர் ஆட்டிடையன் தன் ஆட்டு மந்தையை வீடு நோக்கி வழி நடத்திச் செல்வதைப் போன்றது. எந்தவொரு ஆட்டையும் அந்த மந்தையில் அவன் கட்டி இழுத்துச் செல்வதில்லை. ஒரேயொரு குச்சி மூலம் ஆடுகளை வழி நடத்திச் செல்கிறான். அத்தனை ஆடுகளும் முன்னால் செல்லும் ”முன்மாதிரி” ஆட்டைப் பின்பற்றி ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கும். ஓரிரு ஆடுகள் ஆங்காங்கே கொஞ்சம் பாதையை விட்டு விலகும் போது, குச்சியைக் கொண்டு இடையன் லேசாகத் தட்டுவான். அத்தோடு அத்தோடு அவை மீண்டும் சரியான பாதைக்கு மீண்டு விடும்.
இந்த அடிப்படையில் மொத்த ஆடுகளையும் வீடு கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், அத்தனை ஆடுகளுக்கும் கண் பார்வை இருக்க வேண்டும். மந்தையில் ஒரு ஆட்டுக்குக் கண் பார்வையில்லாமலிருந்தால், என்ன தான் குச்சியால் தட்டினாலும், என்ன தான் முன்னால் செல்லும் ஆடு சரியான பாதையில் நடந்து காட்டினாலும், அந்தக் குருட்டு ஆடு சரியான வழியில் பயனிக்கப் போவதில்லை. தான்தோன்றித் தனமாகக் கால் போன திக்கில் அந்த ஆடு விலகிப் பயணிக்கும். ஈற்றில் வழி தவறிக் காட்டில் தனியே சிக்கி, ஓநாய்களுக்கு விருந்தாகி விடும்.
இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் அல்லாஹ் மனிதனுக்கு நேர்வழி காட்டுகிறான். இந்தத் தத்துவத்தை ஒவ்வொரு நபியும் அடிமனதில் உணர்ந்திருக்க வேண்டுமென்பதனால் தான் அத்தனை நபி மார்களையும் அல்லாஹ் ஆடு மேய்ப்பவர்களாக ஆக்கியிருக்கலாம்.
தினமும் எத்தனை தடவை ஷைத்தான் மனிதனை நேர்வழியை விட்டும் விலகச் செய்ய முயற்சிக்கிறான்? குறைந்தது எத்தனை தடவை நம்மை மேய்க்கும் இடையன் நம்மைக் குச்சியால் தட்டி, நேரான பாதையில் செலுத்த வேண்டியிருக்கிறது? ஆகக் குறைந்தது தினம் ஐந்து தடவையாவது நம்மை மேய்க்கும் இடையன் நம்மைக் குச்சியால் தட்டி நேர்வழியில் செலுத்த வேண்டிய அளவுக்கு நமது நிலைமையிருக்கிறது.
இதனால் தான் குறைந்த பட்சம் ஐந்து விடுத்தமாவது ஒரு முஸ்லிம் தொழுது, அல்லாஹ்விடம் நேர்வழியைக் காட்டச் சொல்லிப் பிரார்த்திக்க வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஒரு நாள், ஒரு மணித்தியாலம், ஒரு நிமிடம் நாம் அல்லாஹ்வின் கருணையிலிருந்தும், உதவியிலிருந்தும் தூரமாகினால், அது ஒன்றே ஷைத்தானுக்குப் போதும். அந்த ஒரு நிமிடத்தை சந்தர்ப்பமாக உபயோகித்து, நம்மை மொத்தமாகக் கவ்விக் கொள்ளும் அத்தனை செயல்திட்டங்களையும் ஷைத்தான் தயார் நிலையிலேயே வைத்திருக்கிறான்.
ஷைத்தானின் சக்தியை நம்மில் பலர் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையென்றே சொல்ல வேண்டும். அதுவும் தஜ்ஜாலின் ஃபித்னா யுகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஷைத்தானின் ஆதிக்கம் மனித வரலாற்றில் இதற்கு முன் இருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும் என்பது தான் நபி (ஸல்) அவர்களின் பல முன்னறிவிப்புகளைப் பார்க்கும் போது தெளிவாகப் புலப்படுகிறது.
தஜ்ஜாலின் யுகத்தைச் எதிர்பார்க்கும் ஷைத்தானிய சக்திகள் தம் பலத்தையும், தொழினுட்பங்களையும் பன்மடங்காக விருத்தி செய்யும் வேலைத்திட்டங்களில் மும்மரமாக ஈருபட்டிருக்கின்றன. அதே அளவுக்கு நம்மிடம் பலம் இல்லையென்றாலும், அவற்றுக்கு முகம் கொடுக்கும் அளவுக்காவது நம்மிடம் அவர்கள் திட்டங்கள் பற்றிய அறிமுகமாவது இருக்க வேண்டும். அவ்வாறான ஓர் அறிமுகத்தைக் கொடுக்கும் நோக்கிலேயே இனிவரும் பகுதி அமையவிருக்கிறது.
மனித உள்ளத்தை ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துவது ஊசலாட்டத்தின் மூலம் மட்டுமே என்று நம்மில் அனேகமானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறான நினைப்பு. உள்ளத்தில் ஊசலாட்டம் ஏற்படுத்துவதையும் தாண்டிய பல சதித் திட்டங்கள் பௌதீக மட்டத்திலும் நம்மைச் சுற்றி அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் இப்லீஸ் தான் சூத்திரதாரி. அவனது பரிவாரங்களுள் ஜின்கள் மட்டுமல்ல; மனிதர்களும் சேர்ந்து தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மனிதர்கள் தாம் மேலே குறிப்பிடப்பட்ட “இலுமினாட்டி” எனும் 13 யூதக் கோத்திரங்களையும் சேர்ந்த ஷைத்தானின் ஊழியர்கள்
இந்தப் பரிவாரங்கள் மூலம் ஷைத்தான் பல்வேறு வகைகளில் மனித உள்ளங்களைக் கைப்பற்றும் நோக்கில் பல சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகளை இன்றைய உலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். அவற்றுல் ஒருசில திட்டங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்…
– அபூ மலிக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s