பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 2

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்

============================

Episode – 2


கண்களால் பார்த்த பின் நம்புவதற்குப் பெயர் பகுத்தறிவு அல்ல; அதற்கு ஒரு மிருகத்தின் அறிவு கூடப் போதும்.
கண்ணால் ஒரு விசயத்தைப் பார்க்க முடியாத போது,
அதை ஆதாரங்களின் அடிப்படையிலும், சிந்தனையின் அடிப்படையிலும் நம்புவதற்குப் பெயர் தான் பகுத்தறிவு;
முறையாக சிந்திக்கும் மூளை இதற்கு அத்தியாவசியம்.

தற்கால உலகின் நவீன விஞ்ஞானத்துக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன.

1. மையநீரோட்ட விஞ்ஞானம் (Mainstream Science)
2. மாற்றீட்டு விஞ்ஞானம் (Alternative Science)

இந்த இரண்டு முகங்களையும் தனித்தனியாகப் பிரித்து நோக்கினால், ஒவ்வொன்றினுள்ளும் பாதி தான் உண்மையிருக்கும்; மீதியைப் பொய்களே நிரப்பியிருக்கும். இரண்டு முகங்களையும் இணைத்து விளங்க யாரால் முடிகிறதோ, அவரால் மட்டுமே உண்மையான விஞ்ஞானம் என்னவென்பதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும்.

மையநீரோட்ட விஞ்ஞானம்:
பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நமக்கு விஞ்ஞானம் என்ற பெயரில் கற்பிக்கப் படுவது மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டும் தான். விஞ்ஞானத்தின் முழுமையான வடிவம் இது தான் என்று கூறுவதற்கில்லை.

“விஞ்ஞானம் என்பது, கல்விக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப் படும் இந்த மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டுமே; இது அல்லாத வேறு எதுவும் விஞ்ஞானமே கிடையாது” என்று யாராவது உறுதியாக அடித்துக் கூறினால், அவர் ஆய்வு செய்யத் தெரியாத கிணற்றுத் தவளை என்று தான் அர்த்தம். ஒருசில மனிதர்கள் எழுதிய சில புத்தகங்களைக் கண்மூடித் தனமாக நம்பிக் கொண்டிருப்பவர் என்று தான் இதற்கு அர்த்தம். உண்மை இதை விடப் பல மடங்கு விசாலமானது.

மையநீரோட்ட விஞ்ஞானத்தில் சில உண்மைகளும் இருக்கின்றன; சில பொய்களும் இருக்கின்றன. இதில் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் (Experimented Facts), மற்றும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளால் முன்வைக்கப் பட்டிருக்கும், நிரூபிக்கப்படாத தனிப்பட்ட சித்தாந்தங்கள் (Theories) ஆகிய இரண்டும் இரண்டறக் கலந்திருக்கும்.

அதாவது, இதை எளிய நடையில் சொல்வதென்றால், இந்த மையநீரோட்ட விஞ்ஞானத்தின் ஒரு பகுதிக்கு ஆதாரம் உண்டு; மற்றப் பாதிக்கு ஆதாரம் இல்லை; ஏதோ ஒரு தனிமனிதனின் ஊகம் மட்டுமே அதில் உண்டு.

அதாவது இதை இன்னும் எளிய நடையில் சொல்வதென்றால், இந்த விஞ்ஞானத்தின் ஒரு பாதி ஆதாரபூர்வமான உண்மை; மறு பாதி, வெறும் கற்பனை மட்டுமே.

மையநீரோட்ட விஞ்ஞானம் என்பது உண்மையில் ஓர் அரசியல் கட்சியைப் போன்றது. நிர்வாக மட்டத்தில் இருக்கும் ஒருசில சர்வதேசத் தலைவர்கள் மூலம் மட்டுமே இதன் விதிமுறைகள் அனைத்தும் இயற்றப்பட்டிருக்கின்றன. இவர்களின் விருப்புவெறுப்புகளுக்கு அமையவே உலகில் ஒவ்வொரு மூலையிலும் இன்று விஞ்ஞானம் கற்பிக்கப் படுகிறது.

எதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்; எதை மறைக்க வேண்டும்; விஞ்ஞானத்தில் எதைப் பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும்; எதை இருட்டடிப்புச் செய்ய வேண்டும்… என்பன போன்ற அனைத்தும் இந்தத் தலைவர்களால் மட்டுமே தீர்மாணிக்கப் படுகின்றன என்பது தான் உலகில் அனேகமானோர் அறியாத உண்மை.

மையநீரோட்டவியல் சித்தாந்தம் (Mainstreamism):
மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டுமல்ல; மையநீரோட்ட வரலாறு, மையநீரோட்டக் கல்வித்திட்டம், மையநீரோட்ட மருத்துவம், மையநீரோட்ட மீடியா… என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதாவது இன்றைய உலகில் இருக்கும் எந்தத் துறையை எடுத்தாலும், அந்தத் துறையை நிர்வகிக்கக் கூடிய பிரதான அமைப்புகளாக இருக்கும் அமைப்புகளால், எதுவெல்லாம் அங்கீகரிக்கப் படுமோ, அவை மட்டுமே மையநீரோட்டம் என்பது தான் இன்றைய உலகின் நிலை.

இவை அனைத்தையும் தமது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு, தமது விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய ஒரு ரகசியக் கும்பல், இந்த உலகைப் பல நூற்றாண்டுகளாக நிர்வகித்து வருகிறது. இவர்கள் வைத்தது தான் இன்று உலகில் சட்டம்.

இவர்கள் நினைக்கும் போது உலகில் யுத்தங்கள் மூளும்; இவர்கள் நினைக்கும் நாடுகளில் மட்டும் அமைதி நிலவும். இவர்கள் கட்டளைப்படி மட்டுமே மீடியாக்களில் செய்திகள் கூட ஒளிபரப்பாகும். இவர்கள் எதைக் கற்பிக்கச் சொல்கிறார்களோ, அவை மட்டுமே பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடநெறிகளாகக் கற்பிக்கப்படும்.

உள்ளூர் வங்கியிலிருந்து உலக வங்கி வரை உலகிலிருக்கும் அத்தனை வங்கிகளுக்கும் இவர்கள் தான் திரைமறைவில் உண்மையான சொந்தக் காரர்களாக இருப்பார்கள். இவற்றின் மூலம், உலகின் மொத்தப் பொருளாதாரத்தையுமே தமது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறார்கள்.

உலகில் வாழும் ஒவ்வொரு குடிமகனது இரத்தத்திலும் என்னென்ன பதார்த்தங்கள் கலக்க வேண்டும்; அவற்றின் மூலம், உலக மக்கள் அனைவரும் எப்படியெல்லாம் இவர்கள் தயவிலேயே என்றென்றும் தங்கி வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்களோ, அவ்வாறான பதார்த்தங்களே மருந்து மாத்திரைகள், தடுப்பூசிகள் என்ற பெயரில் உலக சுகாதார திணைக்களம் போன்ற அமைப்புகளின் ஊடாக உலகின் ஒவ்வொரு குடிமகனின் இரத்தத்தினுள்ளும் வந்து சேரும்.

சுருங்கக் கூறினால், உலக அரங்கின் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, உலகையே கட்டியாண்டு கொண்டிருப்பது இந்த இரகசியக் கும்பல் தான்.

ஆனால் இவர்கள் யாருமே தலைமைப் பதவிகளில் இருக்க மாட்டார்கள்; அனேகமானோருக்கு இவர்கள் யாரென்று கூடத் தெரியாது. உலகின் எல்லாத் துறைகளிலும் அதிகார மட்டத்தில் (பெரிய பெரிய நாடுகளின் ஜனாதிபதிகள் உட்பட) இவர்களது அடியாட்களே இவர்கள் சார்பாக அட்சி செய்து கொண்டிருப்பார்கள். அவ்வாறான ஆட்சித் தலைவர்களைத் தமது இஷ்டத்துக்கு ஏற்றவாறு குடுமியைப் பிடுத்து ஆட்டுவிப்பதன் மூலமே இவர்களது ரகசிய சாம்ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் யார் என்பதை அலசுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல; இன் ஷா அல்லாஹ் இன்னொரு தொடரில் இது பற்றி விரிவாகப் பார்க்கலாம். சுருக்கமாக இப்போதைக்குக் கூறுவதென்றால், “இலுமினாட்டி” (Illuminati) என்று அழைக்கப்படுவோர் இவர்கள் தாம். பதின்மூன்று யூத கோத்திரங்களைச் சார்ந்த அங்கத்தவர்கள் தாம் இவர்கள்.

அஸ்தர், Bபண்டி, கொலின்ஸ், டுபோண்ட், ஃப்ரீமன், கென்னடி, லீ, ஒனாஸிஸ், ரெனோல்ட்ஸ், ரொக்கஃபெல்லர், ரொத்ஷைல்ட், ரஸல், வான்டுய்ன் ஆகிய 13 பழமை வாய்ந்த கோத்திரங்களும் தான் இவை.

இந்தப் பதிமூன்று கோத்திரங்களிலும் இருந்து முளைத்த இன்னும் ஒருசில உப கோத்திரங்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு மெரோவேங்கியன், டிஸ்னி, மெக்டானல்ட் போன்ற குடும்பங்களைக் குறிப்பிடலாம்.

இதில் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், இந்தக் கோத்திரங்கள் அனைத்துமே யூதக் கோத்திரங்கள். ஆனாலும், இவர்கள் யூத பைபிளைப் பின்பற்றுவதில்லை; மாறாக “லூசிஃபேரியனிசம்” (Luciferianism) எனும் ஷைத்தானிய மதத்தைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள். இவர்களது கடவுள் வேறு யாருமல்ல; இப்லீஸ் தான்.

இவர்களுக்கும், இப்லீஸின் பட்டாளத்தைச் சேர்ந்த ஜின்களுக்கும் இடையில் ஏராளமான இரகசியத் தொடர்புகள், மற்றும் ஒப்பந்தங்கள் இருக்கின்றன. அந்த ஒப்பந்தகளின் அடிப்படையில் தான் இவர்கள் இன்றைய உலகை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதாவது, இதை இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், இப்லீஸின் பாரிய திட்டங்களை உலகில் செயல்படுத்தும், இப்லீஸின் மனிதப் பிரதிநிதிகள் தான் இவர்கள். மனித ஷைத்தான்கள் என்பது இவர்கள் தாம்.

கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. இதை இன் ஷா அல்லாஹ் விரிவாகத் தகுந்த ஆதாரங்களோடு இந்தத் தொடரில் அலச இருக்கிறோம்.

இவர்களின் இப்போதைய இலக்கு ஒன்றேயொன்று தான்:

தஜ்ஜால் வரும் போது, அவனது கையில் இந்த உலகின் மொத்த நிர்வாகத்தையும் ஒப்படைக்க வேண்டும். மிக சீக்கிரத்தில் தஜ்ஜால் வெளிவரவிருப்பதை இவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தஜ்ஜால் வந்தவுடன், அவனது கையில் மொத்த உலகத்தினதும் ஆட்சியை ஒப்படைக்கும் விதத்தில், இன்றைய உலகம் மொத்தத்தையும் அதற்கேற்றாற்போல் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் பணியில் தான் இப்போது இவர்கள் மும்மரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பற்றிய அறிமுகம் இவ்வளவும் போதும். மீண்டும் விசயத்துக்கு வருவோம்.

உலகிலிருக்கும் மையநீரோட்ட சித்தாந்தங்கள் அனைத்தையும் இவர்கள் தான் திட்டம் வகுத்து, உருவாக்கி, நிர்வகித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் இன்று விஞ்ஞானம் என்ற பெயரில் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படும் மையநீரோட்ட விஞ்ஞானம் கூட இவர்கள் வகுத்த பாடநெறி தான். பாதி உண்மையான விஞ்ஞானத்தோடு மீதி பொய்யான சித்தாந்தகளையும் கலந்து தான் கல்விக்கூட விஞ்ஞானத்தின் பாடநெறிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதன் நோக்கம், சுயமாக சிந்திக்க முடியாத, மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சமூகத்தை உலக அரங்கில் உருவாக்குவது மட்டுமே.

இது தான் மையநீரோட்ட விஞ்ஞானத்தின் நிலை. இனி அறிவியலின் அடுத்த முகத்துக்கு வருவோம்.

மாற்றீட்டியல் சித்தாந்தம் (Alternativism):
ஷைத்தானின் திட்டங்களை உலகில் அமுல்படுத்திக் கொண்டிருக்கும் இலுமினாட்டி கோத்திரங்களின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் அனைத்துத் துறைகளிலும், அவர்களுக்கு சவாலாகவும், அவ்வப்போது உண்மைகளை அம்பலப் படுத்துபவர்களாகவும் ஒருசில சிந்தனையாளர்கள் வரலாற்றில் முளைப்பதுண்டு.

இவ்வாறான சிந்தனையாளர்களின் பார்வையில் அறிவியல், விஞ்ஞானம், வரலாறு போன்ற அனைத்தும் சற்று மாறுபட்டதாக இருக்கும். மையநீரோட்டக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் இவ்வாறான சிந்தனையாளர்கள் வாயிலாக உலக அரங்கில் முன்வைக்கப் படுவதுண்டு. இதற்குக் காரணம் இவ்வாறானவர்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும், இன்னொருவரது சிந்தனை ஆதிக்கம் இல்லாமலும் ஆய்வு செய்வது தான்.

இவ்வாறான ஆய்வுகள் மூலம் வெளிப்படும் கருத்துக்கள் தான் மாற்றீட்டியல் சித்தாங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு மாற்றீட்டு விஞ்ஞானம் (Alternative Science), மாற்றீட்டு மருத்துவம் (Alternative Medicine) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான மாற்றீட்டு அறிவியல் கூட நூற்றுக்கு நூறு உண்மையென்று சொல்லி விட முடியாது. அதிலும் பல தவறான சித்தாந்தங்கள் இருக்கத் தான் செய்கின்றன. இந்த இடத்தில் தான் நமது பகுத்தறிவை நாம் சரியாக உபயோக்கிக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்கு வழங்கிய சொந்த மூளையைக் கொண்டு சுயமாக சிந்தித்து நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இரண்டு தரப்புக் கருத்துக்களையும் முடிந்தவரை ஒப்பிட்டு அலசி, நமது சிந்தனைக்கு ஏற்ப, எது உண்மை என்பதை நாம் தான் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். இது தான் சிந்திக்கும் மக்கள் செய்யும் காரியம். இதைத் தான் இந்தத் தொடர் மூலம் நான் செய்ய முயற்சித்திருக்கிறேன்.

இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s