நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.

தொண்டி | செப்டம்பர் 15

தொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக தொண்டி பெரிய பள்ளிவாசலில் சிறப்பு மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் மௌலானா அப்துல் ஜப்பார் யூசுஃபீ அவர்கள் தலைமை வகித்தார்கள்.

தொண்டி அனைத்து தெரு ஜமாஅத்துகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தொண்டி நயீமிய்யா அரபுக் கல்லூரி மாணவர் R. முஹம்மது அப்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

சிறப்பு சொற்பொழிவு

நிகழ்ச்சியில் புதுக் கோட்டை ஜாமிஆ சிராஜும் முனீர் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் A. முஹம்மது ஹாரூன் ஹஸன் காஷிஃபீ அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று

ஹிஜ்ரத் தரும் படிப்பினை

என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் மாணவர்கள் மற்றும் தாய்மார்களும் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.


My Thondi.Com™ News Team.

Leave a comment