Sep – 13 | நம்புதாளை.
நம்புதாளையில் மேற்கு தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனி நபருக்கு சொந்தமான ஆக்டிவா இரு சக்கர வாகனம் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு நம்புதாளையில் வேறு இரு சம்பவங்களில் இதே போல ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டு பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே அச்சமான சூழ்நிலையை ஏற்படத்தியுள்ளது.

இது குறித்து தொண்டி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Team MyThondi.Com™