சூரத்துல் ஹுஜுராத் – மனித மாண்புகளின் மாபெரும் பொக்கிஷம்
தொண்டி: தொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தப்ஸீர் ஆய்வரங்கத்தை முன்னிட்டு, பெண்களுக்கான சிறப்பு குர்ஆன் அறிவுப் போட்டி நடத்தப்பட உள்ளது.
‘குர்ஆனை அறிந்து ஓதுவோம்’ என்ற கருப்பொருளில், ‘சூரத்துல் ஹுஜுராத் – மனித மாண்புகளின் மாபெரும் பொக்கிஷம்’ என்ற தலைப்பில் இப்போட்டி நடைபெறுகிறது.
திருக்குர்ஆனின் 49-வது அத்தியாயமான சூரத்துல் ஹுஜுராத் முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு, அதன் தஃப்ஸீர் இப்னு கஸீர் விளக்கவுரையிலிருந்து 50 கேள்விகள் இடம்பெறும். எழுத்துத் தேர்வு முறையில் போட்டி நடைபெறும்.
போட்டி நடைபெறும் நாள் மற்றும் நேரம்
- நாள்: 17-12-2026, வியாழக்கிழமை
- நேரம்: மாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை
- பாடப்பகுதி: சூரத்துல் ஹுஜுராத் முழுவதும்
- தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
பரிசு விபரங்கள்
- 🥇 முதல் பரிசு – ரூ.5,000
- 🥈 இரண்டாம் பரிசு – ரூ.3,000
- 🥉 மூன்றாம் பரிசு – ரூ.2,000
மேலும், 10 நபர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
போட்டிக்கான விதிமுறைகள்
- தொண்டியைச் சார்ந்த 18 வயது நிறைவு பெற்ற அனைத்துப் பெண்மணிகளும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
- அனைத்து நிலைகளிலும் தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
📝 போட்டியில் பங்கேற்க இங்கே பதிவு செய்யுங்கள்!
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பெண்மணிகள் கீழே உள்ள பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தங்களது பெயர்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 12-12-2026 (சனிக்கிழமை).
பங்கேற்பாளர்கள் கீழே உள்ள Google Form மூலம் பதிவு செய்யவும்.
பெண்களுக்கு அழைப்பு!
குர்ஆனைப் பொருளுணர்ந்து படித்து, அதன் உயரிய வாழ்வியல் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்வதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தொண்டியைச் சார்ந்த அனைத்துப் பெண்மணிகளும் ஆர்வத்துடன் பங்கேற்று பலனடையுமாறு நகர ஜமாஅத்துல் உலமா சபை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
ஏற்பாடு: நகர ஜமாஅத்துல் உலமா சபை, தொண்டி.