லலிதா ஜுவல்லரி திருட்டின் பலே கில்லாடி | யார் இந்த திருவாரூர் முருகன் ?

திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடையில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளை போட்டு 28 கிலோ தங்க நகைகளை திருடப்பட்டது.இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து திருடிய வீடியோக்கள் வெளியாகிய நிலையில் கொள்ளை நடந்த 48 மணிநேரத்தில் கொள்ளையர்களை திருவாரூர் பகுதியில் வாகனசோதனையின் போது டூவிலரில் சென்று கொண்டிருந்த இருவரை மறித்த போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டுள்ளான்.மற்றொரு திருடன் சுரேஸ் தப்பியோடினார். மணிகண்டனை பிடித்த போது அவனிடம் இருந்த மூட்டையில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது. அந்த நகைகளில் உள்ள பார் கோடுகளை பரிசோதனை செய்ததில் அது லலிதா ஜீவ்வலரி நகைகடைகளில் திருடப்பட்டவை உறுதி செய்தனர்.இந்த பின்புலத்தில் இருக்கும் திருடன் இந்தியாவின் தென் மாநிலங்களை வங்கி கொள்ளைகளில் அதிர வைத்த #திருவாரூர் #முருகன் என்பது குறிப்பிடதக்கது…யார் இந்த திருவாரூர் முருகன் யார் ?ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் சுமார் நூறு வழக்குகளில் தொடர்புடையவன் கொள்ளையன் முருகன்.சொந்த ஊரை அடைமொழியாக்கி திருவாரூர் முருகன் என அழைக்கப்பட்டும் இந்த திருடன் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் “Most wanted accused”. 2014-ம் ஆண்டில் இருந்து 2015 வரை ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள வங்கிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சைபராபாத் காவல் துறையினரை அதிரவைத்த முருகனும் அவனது கூட்டாளியும் தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.சில மாதங்களில் #ஜாமீனில் #வந்த #முருகன் தலைமறைவாக இருந்த நிலையில், சென்னையில் முகாமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு போலீசாரை அதிரவைத்துள்ளான்.தற்போது திருச்சியில் தன் சகாக்களுடன் #மணிகண்டன் #கோபால் ஆகியோர் உதவியுடன் தான் திருச்சி லலிதா ஜீவல்லரியில் தன் கைவரிசையை காட்டியுள்ளான்.ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில காவல் துறையினருக்கு பெரும் சவாலாக விளங்கும் #திருட்டு #கும்பலின் #தலைவனான திருவாரூர் முருகனை பிடிக்க தமிழக காவல் துறையும் தனிப்படை அமைத்து களமிறங்கியுள்ளதுதிருவாரூரில் வாகன சோதனையில் சிக்கிய #மணிகண்டன் #முருகனின் #உறவினர். இவர்கள் நண்பன் சுரேஷ் தப்பியோடியுள்ளான். மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ நகை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s