பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32

இந்திய துணைக் கண்டத்தோடு இராமேஸ்வரம் தீவை சாலை வழியாக இணைக்கும் பாம்பன் (அன்னை இந்திரா காந்தி) பாலத்திற்கு வயது 32.

மண்டபம் – பாம்பன் இடையே உள்ள கடல் மீது சுமார் 2.32 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதத்தில் ரூ 19.26 கோடி மதிப்பீட்டில் 72 தூண்களுடன் நிறுவப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.

மிகுந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக, 140 அடி உயரத்தில் இரு தூண்கள் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்திரா காந்தியின் மகனும், முன்னாள் பிரதமருமான திரு ராஜீவ் காந்தி 1988-ம் ஆண்டு அக்டோபர் 2 -ல் பாலத்தை திறந்து வைத்து நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக மழை, புயல் சூறாவளி காற்றிலும் எவ்விதமான சேதமுமின்றி கம்பீரமாக காட்சியளிக்கும் ,

பாம்பன் பாலத்திற்கு சில தினங்களுக்கு முன் 32 – வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது.

32 – வது வயது காணும் பாம்பன் பாலத்தையும் அதனை வடிவமைப்பதற்காக இரவு, பகல் பாராது உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களையும் நன்றியுடன் நினைவு கூறுவோம்.

Leave a comment