2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் நாளை (10-10-2019) முதல் விண்ணப்பிக்கலாம் என ஹஜ் கமிட்டி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2020 ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்ஷாஅல்லாஹ்
10-10-2019 முதல் 10-11-2019 வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது.இந்த வருடம் 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் விண்ணப்பம் வசதி மட்டுமே உள்ளது. எனவே அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.வழிகாட்டி விபரங்களை http://hajcommittee.gov.in/ என்ற இந்திய ஹஜ் குழு இணைய தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலமாக ஹஜ் கமிட்டிக்கு விண்ணப்பம் செய்யலாம்.அது பற்றி அறியாதவர்கள் அல்லது இயலாதவர்கள் மாநில ஹஜ் குழு மற்றும் தனியார் NGO (Non Government Organisation) உதவியைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.