மரைக்காயர்கள் யார் ??

சென்னையின் கோவளம் தொடங்கி குமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் வரை தமிழக முஸ்லிம்கள் கடற்கரையோரம் பரந்து விரிந்து கிடப்பதை பார்க்கின்றோம் இவர்களது வரலாறு 1200 ஆண்டுகளுக்கு பழமையானது

இதில் பல்வேறு வரலாற்று உண்மைகள் அடங்கிக் கிடக்கின்றன.
எவ்வாறு இவர்கள் கடற்கரையோரம் அடர்த்தியாக இருக்கின்றார்கள் என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்

இஸ்லாத்தை போதிக்க வந்த தாபியீன்கள் மற்றும் தபோ தாபியீன்கள் அவுலியாக்களாக மாற்றப்பட்டனர். நாகூர் ஏர்வாடி சென்னை கோவளம் போன்ற தர்காக்களை நாம் பார்க்கலாம்

ஒருகாலத்தில் மரக்கலங்களை உருவாக்கி பயணித்தவர்கள் என்பதனால்தான் இன்றும் மரைக்காயர்கள் என்று அழைக்கப் படுகின்றார்கள் கப்பல்களை அதிகம் இயக்கியது முஸ்லிம்கள்தான்

இதன் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் குறிப்பாக ஜாவா இலங்கை மலேசியா பர்மா போன்ற நாடுகளுக்கு அவர்கள் மரகப்பல்கள் மூலமாக சென்று வணிகம் செய்து வந்தனர்

நாகப்பட்டினத்திலும தூத்துக்குடியிலும் போர்த்துகீசிய கேப்டன் வாஸ்கோடகாமா உடன் மோதிய குஞ்சாலி மரைக்காரின் வரலாற்றையும் இந்த கடற்கரையோரங்கள் இன்றும் சொல்லும்.

நாகூரில் குஞ்சாலி மரைக்காயர் தெரு என்ற பெயரில் தெரு இன்றும் உள்ளது

மிககச்சிறந்த மீனவர்கள் ஆக அந்த காலங்களில் முஸ்லிம்கள் தான் இந்த பகுதியில் விளங்கினர் அதன்மூலம் செல்வந்தர்களாகவும் விளங்கினர்

எப்போது வளைகுடா நாடுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதிலிருந்து அவர்கள் தங்களது மீனவர் தொழிலை விட்டுவிட்டு வளைகுடா நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் படையெடுத்தனர் தற்போது இந்த பகுதிகளில் முஸ்லிம்கள் மீனவர்கள் ஆக செயல்படுவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது

இருந்தாலும் இறைவனின் கிருபையால் செல்வ வளத்தில் ஓங்கி வளர்ந்தவர்களாக உள்ளனர்

இந்த கடற்கரையோர இஸ்லாமிய மக்களிடம் விருந்து உபசரிப்பு என்பது மிகுந்து இருக்கும் விருந்தாளிகளை இவர்கள் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு உபசரிக்க கூடியவர்களாக இன்றும் விளங்குகின்றனர்

முன்பு இவர்களிடம் மூடநம்பிக்கைகள் நிறைந்து இருந்தது தற்போது அவைகளிடம் இருந்து விடுபட்டவர்களாக இவர்கள் விளங்குவதை பார்க்கின்றோம் அதிக கல்வியறிவு பெற்றவர்களாகவும் தற்போது இந்த கடற்கரையோர முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர் வளைகுடா நாடுகள் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் இன்று மிக அதிகமாக இந்த கடற்கரையோர மக்களின் வாரிசுகள் வசிக்கின்றனர்

தமிழகத்தின் செல்வவளம் உயர்ந்ததிலும் இவர்களது பங்கு கணிசமாக உண்டு

நன்றி : மயிலை கமருதீன்


MyThondi.Com Team

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s