மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சோழவந்தான் பகுதியில் கடந்த 23.09.2019-ம் தேதியன்று நடந்து சென்ற இரண்டு பெண்களிடம் நகையை பறித்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ரோந்து பணியை தீவிரப்படுத்தினார். குமாரம் பகுதி அருகே கொள்ளையர்கள் பைக்கில் வருவதை அறிந்த காவலர்கள் திரு.மூவேந்தன் மற்றும் திரு.காளிராஜ் ஆகியோர் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடிய கொள்ளையர்களை 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் மேலும் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினர்.
தொகுப்பு
My Thondi.Com Team