கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ்

சேவை செய்ய காத்திருக்கிறார் நாம் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டும் போதும் தொண்டியை குட்டி கேரளாவாக மாற்றி விடுவார்
சமூக ஆர்வளர் பியூஸ் மனுசை தெரிந்து வைத்திருக்கும் நாம் நம் மாவட்டத்தை நம் தொண்டி சேர்ந்த நம் ஊரை பசுமையாக்க பல வருடங்களாக பாடுபடும் இவரை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
யார் இந்த சதீஸ் ?

இவர் ஒரு படித்த பட்டதாரி தொண்டியை சேர்ந்தவர் திருவாடானையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்
இவர் சுமார் ஒரு 12 வருட காலமாக மனித இனத்திற்காக ஒரு அருமையான பணியை சேவையை செய்து வருகிறார்
இன்று தொண்டியில் முக்கிய இடங்களில் புதிதாக ஒரு மரம் நடப்பட்டு இருந்தால் அது சதீஸ் அவர்கள் நட்ட மரமாகத்தான் இருக்கும் இதுவரை 300 க்கு மேற்பட்ட மரங்களை சதீஸ் அவர்கள் தொண்டி சுற்று பகுதியில் நட்டுள்ளார்
என்னதான் தனிமனிதாக ஓடி ஓடி வேலை செய்தாலும் ஒரு கையில் எப்படி ஓசை வரும் என்பது போல இன்னும் பல கரங்கள் இவருடன் இணையவில்லை
தனி ஆளாக சொந்த பைக்கில் தன் சொந்த செலவில் பெட்ரோல் போட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகிறார்

ஒரு பைக்கில் அத்தனை மரங்களுக்கும் தனி ஆளாக எப்படி தண்ணீர் ஊற்ற முடியும்
அவரால் தனி ஆளாக இந்த சேவையை செய்ய முடியவில்லை என்றாலும் இந்த மண்ணின் நேசமும் இயற்கையின் சுவாசமும் அவரால் விட முடியவில்லை
இன்னும் தொண்டி பொது மக்களின் ஆதரவும் ஜமாத்தார்கள் இளைஞர்களின் ஒத்துழைப்பு இருந்தால் இன்னும் 5 வருடத்தில் தொண்டியை குட்டி கேரளாவாக மாற்றி விடுவேன் என ஆர்வத்துடனும் ஏக்கத்துடனும் தெரிவித்தார்
இன்று இவருக்கு தேவையாக இருப்பது செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஒரு ட்ராக்டர் வண்டி மட்டும் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஜமாத் ஒத்துழைப்பு இருந்தால் இன்னும்
வீரியமாக தொண்டியை பசுமை தொண்டியாக மாற்றி விடலாம் என கூறுகிறார் சதீஸ்

மழை இல்லை மழை இல்லை என புலம்பி கொண்டு இருக்கிறோமே தவிர யாரும் மரம் நடுவதாக தெரியவில்லை.
தொண்டி சுற்று வட்டார பகுதிகளில் மேகங்கள் வந்து வந்து செல்கிறது ஆனால் அந்த மேகத்தை குளிர்விப்பதற்கு குளிர்ந்த காற்று வேண்டும் குளிர்ந்த காற்று வேண்டும் என்றால் மரம் வேண்டும் மரம் இல்லாத காரணத்தால் கடற்கரை உப்பு காற்று மேகங்களை அள்ளி சென்று விடுகிறது
உப்பு காற்று அடித்து செல்வதால் தான் பெரும்பாலும் கடற்கரை ஒரே பகுதிகளில் மழை பெய்வது இல்லை மழை வேண்டும் என்றால் அதிகமான மரங்கள் நடவேண்டும்
இன்றைய தேவைக்கு நாம் 1250 அடி வரை சென்று நிலத்தடி நீரை உறுஞ்சி பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் அந்த நிலத்தடி நீர் நம் சந்ததிகளுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே நம் சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் மரம் இருந்தால் மட்டுமே மலை பெற முடியும் ..?? ஒன்றிணைந்து செய்வோமா ..??
தொண்டியை பசுமையாக்க தன் உடல் உழைப்பை தர ஏக்கத்துடன் காத்துகொண்டு இருக்கிறார் சதீஸ்
தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ் அவர்களின் தொடர்பு எண் :- +91 99 43 81 82 50


(உடன் இருப்பவர்கள் தொண்டி VAO , இன்ஜினியர் சபியுல்லாஹ் , தொண்டி காவல் அதிகாரி)