டிஜிட்டல் அபாயம். தப்பிப்பது எப்படி !? தொடர் : 1 – அறிமுகம்.

அஸ்ஸலாமு அலைக்கும்..!!

#டிஜிட்டல் உலகம்.

இன்றைய நவீன யுகம். எங்கும் வேகம். எதிலும் வேகம். நினைத்தால் கணப்பொழுதில் எதுவும் கிடைக்கும் அளவு டிஜிட்டல் சேவைகள் வளர்ந்திருக்கிறது.

வீட்டிலோ, அலுவலக அறையிலோ உட்கார்ந்து கொண்டே உலகின் எந்த கடையில் என்ன பொருள் உள்ளது ?! விலை என்ன ?! என பார்த்து விலை பேச முடியும்.

நினைத்த உணவை வாங்கி உண்ண முடியும். வாகனம், கடன், மருத்துவம், அழகு, கட்டணம் என ஏராளமான தேவைகளையும் நிறைவேற்ற முடிகிறது.

கால் கடுக்க பேங்குகளில் மேனேஜர் கையெழுத்து வாங்கி பணம் வாங்க நிண்ட காலம் போய் பெரும்பாலும் ஒரு கார்டை தேய்த்து எடுத்தால் பணம் போட / எடுக்க முடியும் என்ற நிலை.

இப்படி எண்ணற்ற பலன்கள். மனிதனின் வேலைகளை எளிதாக்கிய இந்த இணைய வழி வாழ்க்கை முறை நலவுகளோடு ஆபத்துகளையும் கூடவே கூட்டி வந்திருக்கிறது.

தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது தகவல்கள், செல்வங்களை இந்த இணைய வழி உலகில் இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று இன்னும் ஒருபடி மேலே போய் டிஜிட்டல் இந்தியாவாக மாறுவதாக சொல்லிக் கொண்டிருக்கும் நம் நாட்டில் எப்படி பயன்படுத்துவது என்பது கூடத் தெரியாத நம் மக்களிடம் ATM கார்டுகள் நிர்பந்தமாக திணிக்க்கப்பட்டிருக்கிறது.

இந்த டிஜிட்டல் உலகத்தால் சமீபத்தில் எனது உறவுகளில் ஏற்பட்ட இரண்டு கசப்பான அனுபவங்கள், என்னை இது பற்றி அதிகம் யோசிக்க வைத்தது.

இது விஷயத்தில் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்க குறைந்தபட்சம் அடிப்படையான நமக்கு தெரிந்த விஷயங்களை முடிந்த அளவு மக்களிடம் சேர்த்து இனி யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதன் வெளிப்பாடே இந்த எனது தொடரின் நோக்கம்.

எனவே எனது பதிவை பார்க்கும் நண்பர்கள் தயவுசெய்து முதலில் இவைகளை தாங்கள் விளங்கிக் கொள்ளுங்கள். நமது குடும்பங்களை புரிய வையுங்கள்.

அதோடு முகநூல், வாட்ஸ்ஆப்பில் அதிகம் ஷேர் செய்யவும் வேண்டுகிறேன்.

இதுவரை இந்த எழுத்துப் பாதையில் எனக்கு அனுபவம் இல்லை என்பதால் என்னை சரி செய்ய நண்பர்களின் கருத்துக்கள், மேலதிக ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

வஸ்ஸலாம்.

==============================

பதிவு #1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s