தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்
Tag: News
நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019
தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.
தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ்… Continue reading தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 4
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ============================== Episode 04: ஷைத்தானின் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள். சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Tactics) என்றால் என்ன? ஒரு மனிதனது மூளை எவ்வாறு சிந்திக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்; எவற்றின் மீது நாட்டம் கொள்ள வேண்டும்; எவற்றை வெறுக்க வேண்டும்... என்பன போன்றவற்றை அந்தந்த மனிதன் தான் அவனது சிந்தனைக்கேற்பத் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். அந்தத் தீர்மாணங்களுக்கான பின்விளைவையும்… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 4
உறவுகள் அறக்கட்டளை மூலம் பள்ளிவாசல் சீரமைப்பு.
தொண்டி | 13-12-2018 நமது ஊர் தொண்டி எம்.ஆர்.பட்டணம் ஜமாஅத் மற்றும் நமது உறவுகள் அறக்கட்டளை இணைந்து செயல்படுத்த இருக்கும் பள்ளிவாசல் மராமத்துப் பணிகள் மறுசீரமைப்பு மற்றும் வண்ணம் பூசுதல் தொடர்பான பணிகள் இன்று இறைவனின் உதவியால் ஆரம்பமாகியுள்ளது.! MyThondi.Com™ Team.
தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?
தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !? நமது தொண்டியில் கடந்த செவ்வாய் முதல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் INDIA1™ என்ற பெயரில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கி உள்ளது. ஏற்கனவே நமது தொண்டியில் ஐந்து (பணமே இருக்காத) ஏடிஎம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வங்கிகளோடு இணைந்தே உள்ளன. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏடிஎம் எந்த வங்கியோடும் இணைந்தது அல்ல..!! அப்படியானால் இது பாதுகாப்பானதா… Continue reading தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?
தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி. தொண்டியில் புதிய ஏடிஎம்(ATM) உதயம். தொண்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் புதிதாக இன்று 28-11-2018 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது * இந்தியா1 ஏடிஎம். இந்த ATM மெஷினின் பயன்பாடுகள்: ⏰24 மணி நேர சேவை 💳 அனைத்து வங்கி ATM கார்டுகளையும் பயன்படுத்தலாம். 💳 பணம் எடுப்பதற்க்கும் ,வங்கி இருப்பித் தொகை சரிபார்ப்பதற்கும் உபயோகிக்கலாம். 💳ஒரு முறை பரிவர்த்தனையில் ரூ.100… Continue reading தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.
தன்னிகரற்ற சேவைக்காக தமிழரை கௌரவித்த கூகுள்.
தொண்டி | 30 - 09 - 2018 கண் மருத்துவ சேவைக்காக ஒரு தமிழனை கௌரவப்படுத்தியிருக்கிறது கூகுள். டாக்டர் கோவிந்தப்பா வேங்கடசாமி, பிரபல கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரான இவரின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு இவரது கண் மருத்துவ சேவையை கௌரவப்படுத்தும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது. டாக்டர் வீ (Doctor V) என சக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் கோவிந்தப்பா வேங்கடசாமி அவர்கள் 1918 ஆம்… Continue reading தன்னிகரற்ற சேவைக்காக தமிழரை கௌரவித்த கூகுள்.
நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.
தொண்டி | செப்டம்பர் 15 தொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக தொண்டி பெரிய பள்ளிவாசலில் சிறப்பு மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் மௌலானா அப்துல் ஜப்பார் யூசுஃபீ அவர்கள் தலைமை வகித்தார்கள். தொண்டி அனைத்து தெரு ஜமாஅத்துகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொண்டி நயீமிய்யா அரபுக் கல்லூரி மாணவர் R. முஹம்மது அப்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.… Continue reading நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.
நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.
Sep - 13 | நம்புதாளை. நம்புதாளையில் மேற்கு தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனி நபருக்கு சொந்தமான ஆக்டிவா இரு சக்கர வாகனம் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நம்புதாளையில் வேறு இரு சம்பவங்களில் இதே போல ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டு பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே… Continue reading நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.