சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் இன்று (11.10.2019) இரண்டு பயணிகளிடமிருந்து, 973 கிராம் எடையுள்ள ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கொழும்பிலிருந்து வந்த விமானம் ஒன்றில் பயணம் செய்த சிவக்குமார் பழனியாண்டி என்பவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து 525 கிராம் எடையுள்ள ரூ.19.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கையிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சகாயமேரி என்பவரிடம் மேற்கொண்ட சோதனையின்போது, 128 கிராம் எடையுள்ள ரூ. 4.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே நபர், தனது ஆசனவாய் மூலம் மறைத்து வைத்திருந்த 320 கிராம் எடையுள்ள ரூ.12.6 லட்சம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் துறை ஆணையாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு இதனைத் தெரிவிக்கிறது.