BSNL, MTNL ஆகிய நிறுவனங்கள் மூடப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என BSNL நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

BSNL பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சில ஊடகங்களில் BSNL நிறுவனம் மூடப்படப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது உண்மைக்குப் புறம்பானதாகும். தற்போது நிறுவனத்தின் நிதி நிலையை சரி செய்ய VRS திட்டம் மற்றும் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய திட்டங்களும், நிறுவனத்தின் அதிக சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சியும் அரசால் செய்யப்படுகிறது.
எனவே எங்களது மதிப்பு வாய்ந்த பயனாளர்களுக்கு நாங்கள் என்றும் சேவை செய்வோம்.
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.