ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு

தீபாவளி பண்டிகைக்கு ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்குவது உள்ளிட்ட ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேஸ்வரம் வரைச் செல்லும் விரைவு வண்டி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மங்களூர் செல்லும் வாரம் இருமுறை விரைவுவண்டி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் தினசரி விரைவுவண்டி ஆகிய ரயில்களை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இயக்கிடவும் வலியுறுத்தியுள்ளேன்.

மேலும் ராமேஸ்வரம் – சென்னை – ராமேஸ்வரம் விரைவு வண்டிகளை உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு வழிவகுக்குமாறும்,
மேலும் மதுரை – பரமக்குடி – ராமநாதபுரம் NH- 49 ல் உள்ள கமுதக்குடி கிராமம் அருகில் மூடப்பட்டுள்ள LC NO. 468 லெவல் கிராசிங் – ஐ பொதுமக்களின் வசதிக்காக மீண்டும் திறப்பது உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து கேட்டுக்கொண்டேன்.

அன்புடன்.,

கே. நவாஸ்கனி,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.

Leave a comment