எந்த ஒரு மதத்திற்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அனைத்து தீவிரவாதங்களும் அரசியலுடன் தொடர்புடையவையாகும்.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.
உலகில் வரலாறு நெடுகிலும் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
செப்டம்பர் 11 க்கு முன்னர் 75 வீதமான தாக்குதல்களை இந்துக்களான தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர்.
ஆனால் அதற்கு காரணமாக எவரும் இந்து மதத்தை குறிப்பிடவில்லை.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் அமெரிக்க கப்பல்களைத் தாக்கினர்.
ஆனால் எவரும் ஜப்பானியர்களின் மதத்தை சுட்டிப் பேசவில்லை என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயோக் நகரில் நடைபெறும் ஜ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள கொள்ளுவதற்காக சென்றுள்ள அவர் கருத்துத் தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
துருக்கி, மலேசியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து இஸ்லாத்துக் எதிரான பிரச்சாரங்களுக்கு பதிலளிப்பதற்கு ஆங்கில மொழியிலான ஒரு தொலைக்காட்சியை ஆரம்பிக்கவுள்ளோம்.
அதற்கான முடிவுகளும் எட்டப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி மூலம் இஸ்லாம் குறித்த சரியான பார்வை வழங்கப்படும் என்றும் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கப்படும். அவ்வாறே மக்களை இஸ்லாத்திற்கு எதிராக அணிதிரட்டும் தப்பபிப்பிராயங்களை இதன் மூலம் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்
முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீதும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் கொண்டிருக்கும் பயபக்தியை உலகம் புறிந்துகொள்ள வேண்டும்.இஸ்லாமோ போபியாவை எதிர்கொள்ளும் வகையில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசியத்தையும் தெளிவு
படுத்தினார்.
மேலும் எந்த ஒரு மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அனைத்து தீவிரவாதமும் அரசியலுடன் தொடர்புடையவையாகும்.அரசியல் ரீதியான அநீதிகள் தான் அவநம்பிக்கையான மனிதர்களை உருவாக்கின்றன.
தற்போது கடும்போக்குவாத இஸ்லாம் என்று ஒன்றைப் பற்றிச் சொல்கின்றனர்.ஒரே ஒரு இஸ்லாம்தான் இருக்கின்றது.அது நாம் பின்பற்றுகின்ற நபிகள் முஹம்மது (ஸ்ல்) அவர்களின் இஸ்லாம்.அது தவிர வேறு இஸ்லாம் இல்லை என்று தெரிவித்தார்
நியூசிலாந்தில் 49 தொழுகையாளிகளை கொலை செய்த வெள்ளை இன மேலாதிக்கவாதி பற்றி என்ன சொல்கின்றீர்கள் அதற்கும் மதத்திற்கும் என்ன சம்மந்தம் என்றும் வினாத் தொடுத்தார். இன்னும் எமது நபிகளாரை கேவலமாக கேலி செய்யும் போது அது எவ்வளவு வேதனையானது என்பதை முஸ்லிம் தலைவர்களாகிய நாம் மேற்கத்திய சமூகங்களுக்கு விளக்கவில்லை. இது ஏன் இவ்வளவு வலியை ஏற்படுத்துகிறது? ஏன்னென்றால் முஹம்மத் (ஸல்) அவர்கள் நம் இதயத்தில் வாழ்கிறார்.இதயத்தின் வலி உடல் வலியை விட மிக மிக கடுமையானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். என்று அவர் தெரிவித்தார்.