பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 11

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
============================

Episode 11: ஸ்கேலார் அலைகள்

சில அண்மைக்கால ஆய்வுகளின் பிரகாரம், “ஸ்கேலார் அலைகள்” (Scalar Waves) எனும் வகையைச் சார்ந்த சக்தி அலைகள், ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகம் கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜெனீவா “ஹாட்ரோன் கொலைடர்” (Hadron Collider) இல், 2011 இல் நடத்தப்பட்ட CERN பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட “நியூட்ரினோஸ்” (Neutrinos) எனும் அடிப்படைத் துகள் போன்ற சக்திச்சொட்டுக்கள் கூட ஸ்கேலார் அலைகளின் வகையராவைச் சார்ந்தவை தாம் என்பதே இன்றைய ஒருசில விஞ்ஞானிகளது அனுமானம். இதற்கான காரணமாக ஒருசில நியாயங்களும் முன்வைக்கப் படுகின்றன:

உதாரணத்துக்கு, நியூட்ரினோஸ் எனப்படும் துகள்கள் ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகத்தில் பயணிக்க வல்லவையோ, அதே போல் ஸ்கேலார் அலைகளும் ஒளியின் வேகத்தையும் மிஞ்சிய வேகத்தில் பயணிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவை (Superluminal).

மேலும், எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், அவை அத்தனையையும் இலகுவாக ஊடறுத்துக் கொண்டு பயணிக்கும் ஆற்றல் நியூட்ரினோஸ் எனப்படும் துகள்களுக்கு எப்படி இருக்கின்றதோ, அதே போல் ஸ்கேலார் அலைகளுக்கும் இதே ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தப் பூமியின் ஒரு பக்கத்தால் உள் நுழைந்து, மறு பக்கத்தால், எந்த விதமான சக்தி இழப்பும் இல்லாமல், அதே வீரியத்தோடு அனாயாசமாக வெளியேறும் அளவுக்கு ஸ்கேலார் அலைகளது சக்தி அபாரமானது.

ஸ்கேலார் அலைகள், மின்காந்த அலைகளின் வகையறாவைச் சேர்ந்த அலைகள் அல்ல; மாறாக எந்த நிலையிலும் சக்தியிழப்பை எதிர்கொள்ளாத “pure zero point energy” எனும் வகையைச் சார்ந்த சக்தியாலானவை.

சாதாரண கண்களுக்கோ, அல்லது சாதாரண தொழினுட்பக் கருவிகளுக்கோ இந்த அலைகள் புலப்படாவிட்டாலும், இவ்வாறான சக்தி அலைகள் தாம் இந்தப் பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன என்ற உண்மை மட்டும் சில பரிசோதனைகள் மூலம் இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்கேலார் அலைகளுக்கு இருக்கும் ஆற்றல்களுள் ஒன்று தான், நமது முப்பரிமான உலகைத் தாண்டிய, மறைவான நான்காவது பரிமானங்களினூடாகவும் இவை பயனிக்கக் கூடியவை என்பது.

அதாவது, ஜின்களின் மறைவான பரிமாண உலகிலிருந்து, மனிதர்களது பரிமாண உலகிற்கும், மனித பரிமாண உலகிலிருந்து ஜின்களின் பரிமாண உலகிற்கும் இடையில் மாறி மாறிப் பயணிக்கும் ஆற்றல் இவ்வாறான சக்தி அலைகளுக்கு உண்டு.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு இன்னும் கொஞ்சம் விளக்கமாக நமது மொழி நடையில் பார்க்கலாம்:

மனிதர்களாகிய நாம் வாழும் உலகமானது, நீளம், அகலம், உயரம் எனும் மூன்று பரிமாணங்களுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் பிரபஞ்சம் என்பது, இந்த மூன்று பரிமாணங்களோடு மட்டுப் படுத்தப் பட்டதல்ல. இந்த மூன்று பரிமாணங்களையும் தாண்டி, நான்காம், ஐந்தாம் பரிமாணங்கள் என்று இன்னும் பல பரிமாணங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கின்றன.

ஆனால், மனிதர்களாகிய நமது புலன்களுக்கோ, அறிவுக்கோ முப்பரிமானங்களைத் தாண்டிய ஏனைய எந்தப் பரிமாணங்களும் எட்டுவதில்லை. இவ்வாறான பரிமாணங்களைத் தான் நமது பாஷையில் மறைவான உலகம் என்று நாம் அழைக்கிறோம்.

மனிதர்கள் சுதந்திரமாக இயங்குவதற்கென்று அல்லாஹ் இந்தப் பிரபஞ்சத்தில் மூன்று பரிமாணங்களை மட்டுமே ஒதுக்கியிருக்கிறான். இந்த எல்லைக்குள் மட்டுமே நம்மால் முழுச் சுதந்திரத்தோடு தொழிற்பட முடியும். இதே போல், நான்காம், ஐந்தாம் பரிமாணங்கள் போன்ற இன்னும் சில பரிமாணங்களை ஜின்களுக்கென்றும், வானவருக்கென்றும் அல்லாஹ் ஒதுக்கியிருக்கிறான். அவற்றில் தான் அவர்கள் சுதந்திரமாக தொழிற்பட்டுக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு தான் அல்லாஹ் ஒரே உலகத்துக்குள், பல உலகங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.

ஜின்கள், மற்றும் வானவர்கள் சஞ்சரிக்கும் பரிமாணங்களினது அதிர்வெண் (frequency) வீதங்களானது, நமது மனித பரிமாணங்களது அதிர்வெண்களை விட அதிகமானவை; ஒளியின் வேகத்தையும் விட அதிவேகம் கொண்டவை.

இதனால் தான், ஒளியின் வேகத்தை விடக் குறைவான ஆற்றல் உடைய நமது கண்களால், ஒளியின் வேகத்தையும் தாண்டிய ஜின்களது உலகைப் பார்க்க முடியாமல் இருக்கிறது. அதே நேரம், வானவர்கள், ஜின்கள் ஆகிய அவர்களது வேகத்தையும் விட நமது பரிமாணத்தின் வேகமும், ஆற்றல்களும் குறைவானவை என்பதால், நமது உலகத்தை அவர்களால் இலகுவாகப் பார்க்க முடிகிறது.

இந்த உண்மையை உறுதிப்படுத்தும் விதமாகவே பின்வரும் குர்ஆன் வசனம் ஆதாரமாக அமைந்திருக்கிறது:

நிச்சயமாக, அவனும் (ஷைத்தானும்), அவனது கூட்டத்தாரும், நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)

இவ்வாறு, ஒரே உலகத்துக்குள்ளேயே, சக்தியின் அடிப்படையில் பரிமாணங்களால் வேறுபட்ட இரண்டு தனித்தனி உலகங்களை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் விதமாகவே அல்லாஹ் உருவாக்கியிருக்கிறான்.

இந்த இரண்டு உலகங்களிலும் தான் மனிதர்களாகிய நாமும், ஜின்களும் இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறுபட்ட இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் பரவலாக வியாபித்திருப்பது, ஒளியின் வேகத்தையும் மிகைத்த, ஸ்கேலார் அலைகளைப் போன்ற இருண்ட சக்திகள் தாம்.

நமது முப்பரிமான உலகிலிருந்து, ஜின்கள் சஞ்சரிக்கும் பரிமாணத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமென்றால், ஒளியின் வேகத்தையும் மிஞ்சிய ஆற்றலோ, அல்லது தொழினுட்பமோ அத்தியாவசியம். இந்த இரண்டுமே மனிதர்களிடம் இதுவரை இல்லை. எனவே தான் ஜின்களின் பரிமாணத்துக்குள் மனிதர்களால் ஊடுறுவ முடியவில்லை.

அதே நேரம், இந்த ஆற்றல், மற்றும் தொழினுட்பம் ஆகிய இரண்டும் ஜின்களிடம் இருக்கின்றன. இதனால் தான் ஜின்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் நமது முப்பரிமாண உலகுக்குள் அவர்களால் இலகுவாக ஊடுறுவ முடிகிறது. இது பற்றிய மேலதிக விளக்கங்கள் தகுந்த ஆதாரங்களோடு பிந்திய தொடர்களில் அலசப்படவிருக்கின்றன. இப்போதைக்கு இது பற்றிய அறிமுகம் போதுமென்று கருதுகிறேன். மீண்டும் ஸ்கேலார் அலைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

உலகின் தொழினுட்ப வரலாற்றில் ஒரு புரட்சியையே தோற்றுவித்த தலைசிறந்த விஞ்ஞானியாக இன்று பலராலும் போற்றப்படும் “நிக்கோலா டெஸ்லா” (Nikola Tesla) என்பவர், 1900 – 1943 காலப்பகுதிகளில், சக்தி அலைகளை அடிப்படையாகக் கொண்ட பல விசித்திரமான ஆய்வுகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

டெஸ்லாவின் ஆய்வுகளில் அனேகமானவை ஸ்கேலார் அலைவரிசைகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருந்தன. ஆனால், தான் ஆய்வு செய்து கொண்டிருந்ததும், பரிசோதனைகள் செய்து கொண்டிருந்ததும் ஸ்கேலார் அலைகளைத் தான் என்ற உண்மை அப்போது அவருக்கே தெரிந்திருக்கவில்லை.

அதாவது, தனது புரிதலையும் மீறிய ஏதோ ஒருவிதமான அபாரமான சக்தி அலைகளையே தான் ஆய்வு செய்து கொண்டிருந்ததை டெஸ்லாவினால் உணர முடிந்தது; ஆனால், அந்த சக்தியின் உண்மையான வடிவம் என்னவென்பதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு அவரது தொழினுபத்துக்கு அன்று ஆற்றல் இருக்கவில்லை. எனவே, தனது சிந்தனையைக் கொண்டு, இது என்ன சக்தியென்பதை அவரால் அனுமானிக்க மட்டுமே முடிந்தது. இதன் அடிப்படையில், டெஸ்லா இந்த அலைவரிசைகளை “ஈத்தர்” (Aether) என்று தான் குறிப்பிட்டார்.

“ஈத்தர்” என்பது பண்டைய கிரேக்கர் காலத்திலிருந்து புழக்கத்திலிருந்த ஒரு பெயர். கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரபஞ்ச சக்தி என்ற அடிப்படையில் தான் பண்டைய காலம் முதல் அனைவரும் ஈத்தர் என்பதை விளங்கி வைத்திருந்தார்கள்.

மத்தியகால “அல்கெமி” ஆய்வாளர்கள் கூட இந்த “ஈத்தர்” விடயத்தில் அதிக ஆர்வத்தோடு பல ஆய்வுகளை மேற்கொண்டார்கள்; ஆனால், அவர்களது ஆய்வுகள் எதுவும் வெற்றியடையாத நிலையில் இடையில் கைவிடப் பட்டன.

பண்டைக்கால புரானங்களில் கூட இதே பிரபஞ்ச சக்தி இன்னொரு பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது தான் “ஆகாஷா” (ஆகாயம்) என்பது. இந்து மத புராணங்களின் படி, இந்தப் பிரபஞ்சம் என்பது ஐந்து வகையான பூதங்களாலேயே (சக்திகளால்) உருவாக்கப் பட்டிருக்கிறது என்பது தான் அவர்களது கோட்பாடு. நீர், நிலம், நெருப்பு, காற்று என்ற கண்ணுக்குத் தெரியும் நான்கு பூதங்கள் போக, வளி மண்டலம் தாண்டிய வின்வெளியின் சக்தி மொத்தத்தையும் ஆகாயம் என்ற ஐந்தாவது பூதமாகவே புராணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆக மொத்தத்தில் “ஆகாயம்” என்று ஆதிகாலத்தில் குறிப்பிடப்பட்டதும், “ஈத்தர்” என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டதும், ஸ்கேலார் அலைகள் என்று இன்றைய விஞ்ஞானிகள் குறிப்பிடுவதும் எல்லாமே ஒளியின் வேகத்தைத் தாண்டிய, பிரபஞ்சத்தின் இருண்ட சக்தி அலைகளைத் தான்.

இவ்வாறான சக்தி அலைகளுள் ஒருசில அலைவரிசைகள் நம்மைச் சூழவுள்ள இந்த முப்பரிமான உலகிலும் பரவலாக வியாபித்திருக்கின்றன. மனித கண்களுக்கோ, சாதாரண மனித கருவிகளுக்கோ இவை புலப்படாவிட்டாலும், தொழினுட்பத் தேவைகளுக்கு மனிதர்களால் அறுவடை செய்துகொள்ள ஏதுவான வடிவத்தில் இவற்றில் ஒருசில அலைவரிசைகள் இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒருசில சக்தி அலைவரிசைகளை அடிப்படையாகக் கொண்டு தான் நிக்கோலா டெஸ்லாவின் பல ஆய்வுகளும், பரிசோதனைகளும் அமைந்திருந்தன. தான் ஆய்வு செய்து கொண்டிருந்த சக்தி அலைகள் எந்த வகையைச் சார்ந்தவையென்று, டெஸ்லாவினால் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறோர் உலகத்திலிருந்து வந்து சேரக் கூடிய ரேடியோ அலைவரிசைகளைப் போன்ற ஏதோ ஒருவிதமான அலைவரிசைகள் தாம் இவை என்று மட்டுமே டெஸ்லா இதைப் புரிந்து வைத்திருந்தார்.

இருந்தாலும், இந்த அலைவரிசைகள் மூலம் மனித சமூகத்துக்குப் பல பயனுள்ள தொழினுட்பங்களை உருவாக்கலாம் என்ற உண்மையை மட்டும் அவரது பரிசோதனைகளில் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் டெஸ்லா சில பாரிய மக்கள் நலன்புரித் திட்டங்களை முன்வைத்தார்.

உதாரணத்துக்கு, எந்தவிதமான கம்பிகளும் இல்லாமல் நிரந்தரமாக முழு உலகுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், மற்றும் பட்டரியே இல்லாமல் ஓடக்கூடிய வாகனங்களைத் தயாரிக்கும் திட்டம் போன்ற ஒருசில ஆக்கபூர்வமான திட்டங்களைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான பல புரட்சிகரமான தொழினுட்பத் திட்டங்களை வெறும் திட்டங்களாக மட்டும் டெஸ்லா முன்வைக்கவில்லை. மாறாக, தனது திட்டங்கள் நூற்றுக்கு நூறு வீதம் நடைமுறை சாத்தியமானவை என்பதைப் பல பரிசோதனைகள் மூலம் செயல் வடிவிலும் செய்து காட்டினார். எந்தவிதமான கம்பிகளின் தொடர்பும் இல்லாமல் பல மின்விளக்குகளை ஏககாலத்தில் எரியவைத்து நிரூபித்துக் காட்டினார். அதே போல் பட்டரியே இல்லாமல் ஒரு காரை வடிவமைத்து, அதை நெடுந்தூரத்துக்கு ஓட்டியும் காட்டினார்.

ஆனால், இந்தத் திட்டங்கள் எதற்கும், அன்றைய அமெரிக்க அரசாங்கத்தைத் தம் சட்டைப் பைக்குள் வைத்திருந்த ஷைத்தானிய இலுமினாட்டிகள் ஒத்துவரவில்லை. இவ்வாறான தொழினுட்பங்கள் மூலம் மனித சமூகம் பயனடைவதற்குப் பதிலாக, மனித இனத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே என்றென்றும் வைத்துக் கொள்ளும் தமது திட்டங்களுக்கு இந்தத் தொழினுட்பத்தையும் ஓர் இரகசிய ஆயுதமாகப் பயன்படுத்துவதையே ஷைத்தானியர்கள் விரும்பினார்கள்.

எனவே, டெஸ்லாவின் இந்தத் திட்டங்கள் எதற்கும் அரச அங்கீகாரம் கிடைக்கவில்லை. மாறாக, டெஸ்லா மரணித்த பின், அவரது தொழினுட்ப ஆய்வுகள் அனைத்தும் இரகசியமாகப் பதுக்கப் பட்டன. பதுக்கப்பட்ட இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பிற்காலத்தில் மனித சிந்தனையைத் தமது தேவைக்கேற்பக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலுமினாட்டிகளது வட்டாரத்தில் ஒரு புதிய விஞ்ஞானம் தோற்றமெடுத்தது.

இந்தப் புதிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு நாசகார செயல்திட்டங்களை ஷைத்தானியர்கள் வடிமைக்கலானார்கள். “மனித ஜீனோம் செயல்திட்டம்” (Human Genome Project), மற்றும் HAARP (High Frequency Active Auroral Research Program) ஆகிய இரண்டு செயல்திட்டங்களும் தாம் இவை. இது பற்றி இன் ஷா அல்லாஹ், அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன்ஷா அல்லாஹ் வளரும்..

– அபூ மலிக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s