“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 2

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள்’. பதிவு – 2

நாள்  : 26/07/2017

………..

வரலாற்றை அறிய வேண்டும். ஏன் ?
______________________________

ஒரு சமுதாயத்தின் வீரம், தொண்மை, பாரம்பரியம், கலாச்சாரம், அதன் சிறப்புகள் அனைத்தும் அதன் வரலாற்றைக் கொண்டே அறியப்படுகின்றன.
தனது வரலாற்றை அறியாத சமுதாயம் விரைவில் அழிக்கப்பட்டுப் போகும் என்பது நியதி.
இன்றைய நமது இந்திய தேசத்தின் பூர்வக் குடிமக்களாகிய நம்மை கைபர் போலான் கணவாய்கள் வழியாக வந்து குடியேறிய வந்தேரிகளான ஆரிய பார்ப்பன கும்பல் அந்நியர்கள் என்றும், அரபு அடிமைகள் என்றும் பரப்பிக் கொண்டிருக்கிறது.

நம்மை தேசத் துரோகிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். 

அதற்கேற்ப வரலாற்றையும் மாற்றி, இருட்டடிப்புச் செய்து அதையே உண்மையென நம்ப வைத்தனர்.
சுமார் 800 ஆண்டுகாலம் இந்திய மக்களோடு இணைந்து அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களாக ஆட்சி செய்த மன்னர்கள் இன்று கொடுங்கோலர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுகளாக சிதறிக்கடந்த இந்த தேசத்தை ஒன்றிணைத்த மக்கள் இன்று நாட்டை இரண்டாகப் பிரித்த பிரிவினைவாதிகள் என புறக்கணிக்கப்படுகின்றனர். 
இந்திய முஸ்லிம்களும் தாங்களே அதை நம்பி தம்மைத்தாமே ஒருவித தாழ்வு மனப்பான்மையில் ஆக்கிக் கொண்டுவிட்டனர்

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம், இந்தியர்களான முஸ்லிம்கள் தாங்கள் யார் என்பதையே மறந்துவிட்டதும் கலாச்சாரச் செறிவும் வீரமும் நிறைந்த தங்களின் வரலாற்றை அறியாமல் போனது தான்.
வெற்றி கொண்ட நாட்டின் ஆண்களை வெட்டி வீழ்த்தி பெண்களை அடிமைகளாக ஆக்குவது என்றிருந்த போர் மரபை மாற்றி வெற்றி கொண்ட நாட்டின் மக்களையும் தமது குடிமக்களாக ஆக்கி அவர்களுக்கும் பாதுகாப்பளித்து அனைத்து உரிமைகளையும் வழங்கியது இந்திய முஸ்லிம் அரசர்களே.
ஆங்கிலேயர்கள் இம்மண்ணை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய முனைந்தபோது அடிமைத்தனம் என்பது இறைவனுக்கு முன்னால் மட்டுமே என்று முழங்கி நாட்டிற்கே விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் இந்திய முஸ்லிம் அறிஞர்களே.

இந்திய நாட்டின் விடுதலைக்காக தமது விகிதாச்சாரத்திற்கும் அதிகமாக உயிர்த்தியாகம் செய்தது இந்திய முஸ்லிம்களே.
முதல் முஸ்லிம்கள்.
இந்தியாவோடு இஸ்லாத்தின் தொடர்பு அரபகத்தில் இஸ்லாம் உருவான காலத்திலேயே துவங்கிவிட்டது.

வணிகரீதியாக இந்தியாவோடு தொடர்பில் இருந்த அரபுகள் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்கள் ஆனபோது அதன் வாயிலாக இந்தியாவிலும் இஸ்லாம் அறிமுகமானது.

கி.பி 600 ல் இந்தியாவின் தென்கிழக்கான மலபார் கேரள பகுதிகளுக்கு வியாபாரிகளாக வந்த அரபு முஸ்லிம்களின் மூலம் அப்பகுதி மக்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து முஸ்லிம்களாயினர்.
அன்றைய அப்பகுதியின் அரசரான சேரமான் பெருமான் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரையும் தாஜுத்தீன் என சூட்டிக் கொண்டார். பிறகு மக்கா சென்று முஹம்மது நபியை சந்தித்து அவர்களோடேயே தங்கிவிட்டார்.
கி.பி 629 ல் அவர் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டது போல் அவர் சார்பாக ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதற்கு சேரமான் பெருமான் ஜும்மா பள்ளிவாசல் என்ற பெயரும் சூட்டப்படது. 

இதுவே இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும்.

உண்மை வரலாறு இவ்வாறிருக்க இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனவே தான் நாம் நமது உண்மை வரலாற்றை அறிய வேண்டியது, அதை நமது சந்ததிகளுக்கும் எடுத்துச் சொல்லவேண்டியது கட்டாயமாகிறது.

………………………………………….

உண்மைகள் பேசும்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s