அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்..!!
முஸ்லிம் சமுதாயமே..!! கொஞ்சம் சிந்தியுங்கள்.
நாம் இந்த நாட்டிற்கு என்ன செய்து விட்டோம்!?
நாமெல்லாம் அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள் தானே..!? இந்துக்கள் தான் இந்த நாட்டு மக்கள். அவர்களுக்குத் தான் இந்த நாடு.
நாளை உங்கள் பிள்ளைகளே உங்களிடம் இப்படி கூறுவார்கள்.
இன்று அதற்கான திட்டம் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கிறது. செயல்படுத்தப்பட்டு வருகிறது.
“முஸ்லிம்கள் அரேபிய அடிமைகள்
முஸ்லிம்கள் அந்நியர்கள்.
முஸ்லிம்கள் தேச விரோதிகள்.”
என இன்று எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய ஒரு வித வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
வளரும் தலைமுறையின் உள்ளங்களில் இந்த விஷயங்களை பாடப்புத்தகங்கள் மூலம் மிகத் திறமையாக விதைக்கப்படுகிறது.
இந்த நேரத்திலேயே நாம் இந்த இந்திய தேசத்தின் விடுதலை, வளர்ச்சியில் ஆற்றிய, ஆற்றிக் கொண்டிருக்கிற பங்களிப்புகளை நம் பிள்ளைகளை அறியச் செய்யாவிட்டால் நான் மேலே சொன்னது உங்கள் பேரப்பிள்ளைகளின் காலத்திலாவது கண்டிப்பாக நடந்தே தீரும்.
எனவே அந்த இளம் சிறார்களின் மனதில் இந்தியாவிற்காக முஸ்லிம்கள் செய்த தியாக வரலாற்றை பதியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் வருடாவருடம் நடக்கும் கோடைக் கால (Summer Class) வகுப்புகளில் இந்த ஆண்டு இந்த வரலாற்றை போதிப்பது என முடிவு செய்தோம்.
அதற்காக தொகுக்கப்பட்ட நூல் தான் நீங்கள் மேலே பார்ப்பது.
தற்போது சுதந்திர தினம் நெருங்கிய நிலையில்
“இந்திய விடுதலை வரலாறு.
சில மறைக்கப்பட்ட உண்மைகள்.
என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நமது பகுதியில் பெரும் வரவேற்பை பெற்ற நூலை இன்ஷா அல்லாஹ் தொடர் பதிவாக பதிவிட நாடியுள்ளோம்.
நண்பர்கள் தாங்களும் படித்து பதிவுகளை அதிகம் பகிர்ந்து மற்றவர்களையும் படிக்கச் செய்து நம் வரலாற்றை முதலில் நாமே அறிந்து உலகையும் அறியச் செய்வோம்.
இன்ஷா அல்லாஹ்.
நன்றி:
- தொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை,
- தொண்டி இறைமறை இயக்கம்.
பதிவுகளை தொடர்ந்து படிக்க..