சென்னை பெருநகர காவல் - போக்குவரத்து மாற்றம் மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் மாண்புமிகு சீன அதிபர் அவர்களின் சென்னை வருகையை முன்னிட்டு 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 11.10.2019 மற்றும்12.10.2019 ஆகிய தேதிகளில் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை)¸ அண்ணாசாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை)¸ சர்தார்… Continue reading சென்னையில் போக்குவரத்து மாற்றம் – விபரங்கள்.
Category: செய்திகள்
ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு
தீபாவளி பண்டிகைக்கு ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்குவது உள்ளிட்ட ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி,… Continue reading ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு
ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி
2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் நாளை (10-10-2019) முதல் விண்ணப்பிக்கலாம் என ஹஜ் கமிட்டி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2020 ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்ஷாஅல்லாஹ்10-10-2019 முதல் 10-11-2019 வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது.இந்த வருடம் 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் விண்ணப்பம் வசதி மட்டுமே உள்ளது. எனவே அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.வழிகாட்டி விபரங்களை http://hajcommittee.gov.in/ என்ற இந்திய ஹஜ் குழு இணைய தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலமாக ஹஜ்… Continue reading ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி
தீவிரவாதத்திற்கு மதமில்லை.
எந்த ஒரு மதத்திற்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அனைத்து தீவிரவாதங்களும் அரசியலுடன் தொடர்புடையவையாகும். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். உலகில் வரலாறு நெடுகிலும் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். செப்டம்பர் 11 க்கு முன்னர் 75 வீதமான தாக்குதல்களை இந்துக்களான தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர். ஆனால் அதற்கு காரணமாக எவரும் இந்து மதத்தை குறிப்பிடவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் அமெரிக்க கப்பல்களைத் தாக்கினர். ஆனால் எவரும்… Continue reading தீவிரவாதத்திற்கு மதமில்லை.
மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ராமேசுவரம் :- மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு படகுக்கும் அரசால் மாதம் தோறும் 1500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலுள்ள 10 இரும்பு படகுகளுக்கு மட்டும் மானிய டீசல் வழங்கப்படவில்லை. விசைப் படகுகளில் 10 படகுகள் இரும்பால் ஆன படகுகளாக உள்ளதால் அந்த படகுகளுக்கு மட்டும் அரசால் வழங்கப்பட்டு வரும் மானிய… Continue reading மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தனியாரிடம் செல்கிறது இந்திய ரயில்வே.
சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சகத்தின் 100 நாட்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது. அதன்படி, டில்லி மும்பை, டில்லி ஜம்மு, காட்ரா, டில்லி – ஹவுரா, செகந்திராபாத் – ஐதராபாத், செகந்திரபாத் – டில்லி, டில்லி –… Continue reading தனியாரிடம் செல்கிறது இந்திய ரயில்வே.
சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோர் கவனிக்க.
ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 7 மற்றும் 8-ம் தேதி ஆயுதப்பூஜை, விஜயதசமி பண்டிகை என்பதாலும் அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாகும். இதனால் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக 6,145 சிறப்பு… Continue reading சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோர் கவனிக்க.
இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.
இராமநாதபுரம் | அக் 02 - 2019 நமது பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு நவாஸ் கனி அவர்கள் நமது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாக தொகுதி முழுவதும் உள்ள இளைஞர்களை இணைத்து அதன் மூலம் பொது சமூக பணிகளை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் இதுபற்றி கூறக்கூடிய காணொளி உங்களுக்காக.. தன்னார்வலர்களாக இணைய விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர் விவரங்களை +91 90139 97380… Continue reading இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.
செயின் பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சோழவந்தான் பகுதியில் கடந்த 23.09.2019-ம் தேதியன்று நடந்து சென்ற இரண்டு பெண்களிடம் நகையை பறித்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ரோந்து பணியை தீவிரப்படுத்தினார். குமாரம் பகுதி அருகே கொள்ளையர்கள் பைக்கில் வருவதை அறிந்த காவலர்கள் திரு.மூவேந்தன் மற்றும் திரு.காளிராஜ் ஆகியோர் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடிய… Continue reading செயின் பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டு
ஆந்திராவிலும் டாஸ்மாக்
இன்று முதல் மதுக்கடைகளை ஆந்திர அரசே ஏற்று நடத்தும் நிலையில் கடை திறப்பு நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி (இன்று) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் ஒரு கட்டமாக கிராம பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்கப்படும் சிறிய கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். ஆந்திராவில் 4,377 மது விற்பனை செய்வதற்கான… Continue reading ஆந்திராவிலும் டாஸ்மாக்