நவாஸ் கனி MP யுடன் மத்திய மந்திரி சந்திப்பு

இராமநாதபுரம் | செப் 25 மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர சிங் தாமோர் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். சந்திப்பின் போது இராமநாதபுரம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்கப் பெறவும், விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தும் வண்ணம் புதிய திட்டங்களை வகுக்கவும் வலியுறுத்தினார். தகவல் : MyThondi.Com Team

நவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு K.நவாஸ் கனி MP அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நம்முடைய மீனவர்களின் நிலை குறித்து விவாதித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.. ------------------------------------------------------------------------ அன்பார்ந்த இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சொந்தங்களே.., என்னுடைய தேர்தல் வாக்குறுதியில் முக்கிய பிரச்சனையாக மூன்றை முன்னிலைப்படுத்தியிருந்தோம். அதில் முதன்மையாக நம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை. அது குறித்து பல்வேறு கோணங்களில்… Continue reading நவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.

தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

தொண்டி - 24/02/2019 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டி கிளை சார்பாக மழை வேண்டி சிறப்புத் தொழுகை தொண்டி - வெள்ளை மணல் தெருவிலுள்ள தவ்ஹீத் திடலில் 24-02-2019 ஞாயிறு காலை 7:15 மணிக்கு நடைபெற்றது! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! என அல்லாஹ்விடத்திலே கேட்டு பிரார்த்தனை செய்து பின்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து… Continue reading தொண்டியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

நெல்லை கலெக்டரின் அதிரடி பேச்சு – கலக்கத்தில் விஏஓ க்கள்.

நெல்லை - 20/02/2019 பணியில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி சில்பா பிரபாகர் சதீஷின் பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மத்திய அரசின் விவசாயிகளுக்கு உதவித் தொகை ₹6000 வழங்க விண்ணப்பங்களை பெறுவதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனமின்மையமாக செயல்படுவதாகவும், பணிக்கு சரியாக வருவதில்லை என்பதாக கூறப்பட்ட புகார்களை தொடர்ந்து இந்த ஆடியோ பதிவை அவர் அனுப்பியுள்ளார். இந்த ஆடியோ இணையத்தில் பரவி பலரும் அவருக்கு பாராட்டுகள் தெறிவித்துள்ளனர்.

ஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்

நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019

தேர்வுப் பரிசுகள் லிஸ்ட்

நமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெறும் மாணவ மாணவிகள் பட்டியல். முதல் பரிசு பெறுபவர்கள் A. ஹதீஜத் ரினா S. சாரத் ரியா S. அஸ்ஃபத் நஹ்லா U. ரீமா பர்வீன் A. முஹம்மது ஜாஸிர் H. நூருல் ஆஃபியா R. ஃபரிலத் ஃபாஸிஹா A. ஜாஸிம் அஹ்மத் S.… Continue reading தேர்வுப் பரிசுகள் லிஸ்ட்

தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.

தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ்… Continue reading தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 4

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ============================== Episode 04: ஷைத்தானின் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள். சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Tactics) என்றால் என்ன? ஒரு மனிதனது மூளை எவ்வாறு சிந்திக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்; எவற்றின் மீது நாட்டம் கொள்ள வேண்டும்; எவற்றை வெறுக்க வேண்டும்... என்பன போன்றவற்றை அந்தந்த மனிதன் தான் அவனது சிந்தனைக்கேற்பத் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். அந்தத் தீர்மாணங்களுக்கான பின்விளைவையும்… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 4

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 3

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - பகுதி 3 =========================== Episode 03: பயணம் ஆரம்பம் ஆரம்பிக்கப்படும் இந்த ஆய்வுப் பயணம் சமயங்களில் ஷைத்தானின் சாம்ராஜ்யத்தினூடு பயணிப்பதாகவும், மற்றும், பல அமானுஷ்ய உண்மைகளைத் தர்க்கரீதியாக அலசுவதாகவும் இருக்கும். ஷைத்தானின் சாம்ராஜ்ஜியத்தினூடு பயணிக்கப் போவதாக சொன்னவுடன் சிலரது உள்ளத்தில் ஒரு தயக்கம் ஏற்படலாம். அல்லாஹ்வின் இறை வேதத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் வரை எந்தக் குழப்பத்துக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயெ இன்றைய உலகைச் சூழ்ந்துள்ள ஒருசில குழப்பங்களை… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 3