தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.

தொண்டி | 10-12-2018 கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. பலர் வீடுகளை இழந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின. எனவே டெல்டா பகுதிகளை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நமது தொண்டியில் இருந்தும் அனைத்து ஜமாஅத்துகளின் கூட்டமைப்பான ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் நிவாரண நிதி மக்களிடம் வசூல் செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 05-12-2018… Continue reading தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 2

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ============================ Episode - 2 கண்களால் பார்த்த பின் நம்புவதற்குப் பெயர் பகுத்தறிவு அல்ல; அதற்கு ஒரு மிருகத்தின் அறிவு கூடப் போதும். கண்ணால் ஒரு விசயத்தைப் பார்க்க முடியாத போது, அதை ஆதாரங்களின் அடிப்படையிலும், சிந்தனையின் அடிப்படையிலும் நம்புவதற்குப் பெயர் தான் பகுத்தறிவு; முறையாக சிந்திக்கும் மூளை இதற்கு அத்தியாவசியம். தற்கால உலகின் நவீன விஞ்ஞானத்துக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. 1. மையநீரோட்ட விஞ்ஞானம் (Mainstream Science) 2. மாற்றீட்டு விஞ்ஞானம்… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 2

உறவுகள் அறக்கட்டளை மூலம் பள்ளிவாசல் சீரமைப்பு.

தொண்டி | 13-12-2018 நமது ஊர் தொண்டி எம்.ஆர்.பட்டணம் ஜமாஅத் மற்றும் நமது உறவுகள் அறக்கட்டளை இணைந்து செயல்படுத்த இருக்கும் பள்ளிவாசல் மராமத்துப் பணிகள் மறுசீரமைப்பு மற்றும் வண்ணம் பூசுதல் தொடர்பான பணிகள் இன்று இறைவனின் உதவியால் ஆரம்பமாகியுள்ளது.! MyThondi.Com™ Team.

தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !? நமது தொண்டியில் கடந்த செவ்வாய் முதல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் INDIA1™ என்ற பெயரில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கி உள்ளது. ஏற்கனவே நமது தொண்டியில் ஐந்து (பணமே இருக்காத) ஏடிஎம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வங்கிகளோடு இணைந்தே உள்ளன. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏடிஎம் எந்த வங்கியோடும் இணைந்தது அல்ல..!! அப்படியானால் இது பாதுகாப்பானதா… Continue reading தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி. தொண்டியில் புதிய ஏடிஎம்(ATM) உதயம். தொண்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் புதிதாக இன்று 28-11-2018 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது * இந்தியா1 ஏடிஎம். இந்த ATM மெஷினின் பயன்பாடுகள்: ⏰24 மணி நேர சேவை 💳 அனைத்து வங்கி ATM கார்டுகளையும் பயன்படுத்தலாம். 💳 பணம் எடுப்பதற்க்கும் ,வங்கி இருப்பித் தொகை சரிபார்ப்பதற்கும் உபயோகிக்கலாம். 💳ஒரு முறை பரிவர்த்தனையில் ரூ.100… Continue reading தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.

தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்

தனுஷ்கோடி நடந்தது என்ன? ஒரு அற்புத பதிவு,,, டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது… Continue reading தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்

கஜா புயல் – முழூ விபரம்

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது, நாகை முதல் வேதாராண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: கஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி நாளை தீவிரப்புயலாக மாறும். ஆனால், தமிழகக்… Continue reading கஜா புயல் – முழூ விபரம்

கஜா புயல் எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 15ஆம் தேதி நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ============++++=========== செய்தி : MyThondi.Com Team 🖊📝

மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்புக் கூட்டம்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அறிவிப்பு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவா் அவா்கள் தலைமையில் 16.11.2018 (வெள்ளிக்கிழமை)அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் (அரசு திட்டங்கள் பெற) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று கீழ்கண்டவற்றில் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை (PHP), மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை (MG), வங்கிக்கடன்… Continue reading மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்புக் கூட்டம்.

டெலிகாம் துறையில் மாற்றங்கள். வரமா ? சாபமா ?

செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! #Alert உங்களுடைய வேலிடிட்டி XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யவும்" - இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்! மேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், ``உங்கள்… Continue reading டெலிகாம் துறையில் மாற்றங்கள். வரமா ? சாபமா ?