நவாஸ் கனி MP – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு.

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு K.நவாஸ் கனி MP அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நம்முடைய மீனவர்களின் நிலை குறித்து விவாதித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..
————————————————————————
அன்பார்ந்த இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சொந்தங்களே..,
என்னுடைய தேர்தல் வாக்குறுதியில் முக்கிய பிரச்சனையாக மூன்றை முன்னிலைப்படுத்தியிருந்தோம்.
அதில் முதன்மையாக நம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை. அது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறோம்.

அதனைத் தொடர்ந்து நம் மாவட்டத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய மீனவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு தேவையான வசதிகள்.

அதனடிப்படையில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம், நாம் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சகத்தையும், மீனவர்கள் நலன் சார்ந்த வசதிகளை செய்து தருவதற்காக அரசு அங்கங்களையும் சந்திக்க உள்ளோம்.

அதற்கு முன்னதாக கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பாக அரசு கையாண்ட விதங்களையும், சிறைபிடிக்கப்பட்ட நம்முடைய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்பதில் இருக்கக்கூடிய சிக்கல்களையும், அதனை சீர்படுத்த கடந்த காலங்களில் அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது தொடர்பாகவும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களுடன் கலந்துரையாடினோம்.
இதுகுறித்து ஆய்வு செய்து, நம்முடைய மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் வரக்கூடிய காலங்களில் நம்முடைய செயல்பாடுகள் அமையும்.

K.நவாஸ் கனி MP ராமநாதபுரம் பாராளுமன்றம் உறுப்பினர்

Leave a comment