அதே வகையில், எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை விஷயங்களை வெளியிட்டு வருகிறது.
அதாவது, வங்கிக் கணக்குகள் பல்வேறு வகைகளில் மோசடியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வங்கியில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்கள், புகார்களை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
அதாவது சமூக வலைத்தளங்களில் வங்கித் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சேவை பெறும் போது, அவை அதிகாரப்பூர்வ கணக்குகளா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, தங்களது சமூக வலைத்தளங்களின் கணக்குகளின் ஐடிக்களை பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் விளம்பரப்படுத்தியுள்ளனர்.

இந்த கணக்குகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளவும், வேறு எந்த கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு செய்திகள் வந்தாலும், அவற்றை நிராகரிக்க வேண்டும், மற்றும் சிவப்புக் கொடி பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, எந்த வங்கியின் சமூக வலைத்தளக் கணக்கை தொடர்பு கொண்டாலும் அதில் நீல நிற டிக் மார்க் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வங்கித் தொடர்பான மோசடிகள் 2018-19ம் நிதியாண்டில் மட்டும் ரூ.71,500 கோடி அளவுக்கு நடந்திருப்பதாக ஆர்பிஐ சுட்டிக்காட்டியுள்ளது. இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், பணமோசடியில் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக நடந்த மோசடிகள் 0.1% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொகுப்பு
My Thondi.Com Team