முட்டை ஆரோக்கியமா ஆபத்தா ?? – ஆரோக்கியம்

ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது

ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்படுகிறது. எனவே அது அதிக சத்துகள் கொண்டதாக உள்ளது,” என்கிறார் அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து அறிவியல் துறை அசோசியேட் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் பிளெஸ்ஸோ.

மற்ற உணவுகளுடன் சேர்த்து முட்டை சாப்பிடும்போது, அதிக வைட்டமின்களை நமது உடல் கிரகித்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. உதாரணமாக, சாலட் உடன் ஒரு முட்டையை சேர்த்துக் கொண்டால், அந்த சாலட் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் விட்டமின்-ஈ அளவு அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதிக கொழுப்புச் சத்து கொண்டது என்பதால் பல பத்தாண்டுகளாக முட்டை சாப்பிடுவது சர்ச்சைக்கு உரியதாக இருந்து வருகிறது.

முட்டை சாப்பிட்டால் இருதய நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சில ஆய்வுகள் தொடர்பு படுத்தியுள்ளன. ஒரு நாளுக்கு மனிதனுக்கு 300 கிராம் கொழுப்புச் சத்து தேவை என்று அமெரிக்க உணவு முறை வழிகாட்டுதல்கள் சமீப காலம் வரை பரிந்துரைத்தன. ஒரு முட்டையின் கருவில் 185 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, அதாவது தினசரி தேவையில் பாதிக்கும் மேல் இதில் உள்ளது.

பொரித்த முட்டைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முட்டை நமக்கு ஊறு விளைவிக்கும் என்பது சரியா?

கல்லீரல் மற்றும் குடல்களில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்ட்ரால் எனும் மஞ்சள் நிறத்திலான கொழுப்பைக் கொண்ட கொழுப்பு, நமது உடலின் செல்கள் அனைத்திலும் உள்ளது. அது கெடுதலானது என்று சாதாரணமாக நாம் நினைக்கிறோம். ஆனால் நமது செல் சவ்வுகளில் முக்கியமானதாக உள்ள இணைப்பு படலத்தை அளிக்கிறது. விட்டமின் டி உருவாக்கவும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரக்கவும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கவும் அது தேவைப்படுகிறது.

நமக்குத் தேவையான அனைத்து கொழுப்புச் சத்துகளையும் நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். ஆனால் நாம் சாப்பிடும் மாட்டிறைச்சி, இறால் மற்றும் முட்டை உள்ளிட்ட இறைச்சிப் பொருட்களிலும் அது கிடைக்கிறது. பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணெயிலும் கிடைக்கிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்புப் புரத மூலக்கூறுகள் மூலமாக உடல் முழுக்க கொழுப்புச் சத்து கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு மாதிரியான கொழுப்புப் புரதங்கள் உள்ளன. தனிப்பட்ட உடலமைப்பைப் பொருத்து, இருதய நோய் வருவதற்கான ஆபத்து அளவு நிர்ணயிக்கப் படுகிறது.

குறைந்த அடர்வு கொண்ட கொழுப்புப் புரதம் கெடுதலான கொழுப்பு என கருதப்படுகிறது. கல்லீரலில் இருந்து ரத்த நாளங்கள் மற்றும் உடலின் திசுக்களுக்கு கொழுப்பு எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதற்கு இது காரணமாகி, இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சி மற்றும் முட்டைகள் போன்ற விலங்கின பொருட்களின் மூலமும் கொழுப்புச் சத்து கிடைக்கிறது.
இறைச்சி மற்றும் முட்டைகள் போன்ற உணவுப் பொருட்களின் மூலமும் கொழுப்புச் சத்து அதிகம் கிடைக்கிறது.

ஆனால் கொழுப்புச் சத்து மிகுந்த உணவை சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்பதற்கான தொடர்பை ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையில், இறால்களுடன் சேர்த்து முட்டையும் குறைந்த செறிவுள்ள கொழுப்பு அதிகம் உள்ள ஒரே உணவாக இருக்கிறது.

“இறைச்சி மற்றும் இதர இறைச்சி பொருட்களைவிட முட்டையில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது என்றாலும், செறிவுள்ள கொழுப்பு ரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும். பல ஆண்டுகளாக பல ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப் பட்டுள்ளது,” என்று அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள மரியா லஸ் பெர்னான்டஸ் கூறுகிறார்.

கொழுப்புச் சத்து பொருட்களைக் கொண்டு தயாரித்த, நன்கு வறுக்கப்பட்ட சில உணவுகளால் நமது எல்.டி.எல். (அல்லது ``கெட்ட'' கொழுப்பு) அளவு அதிகரிக்கும்.
கொழுப்புச் சத்து பொருட்களைக் கொண்டு தயாரித்த, நன்கு வறுக்கப்பட்ட சில உணவுகளால் உடலில் ”கெட்ட” கொழுப்பு அளவு அதிகரிக்கும்.

முட்டை சாப்பிடுவதற்கும், இதயக் கோளாறுகளுக்கான ஆபத்து அதிகரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவருடைய சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், நீண்ட காலம் தொடர்ந்து முட்டை உட்கொள்வது பற்றிய சில ஆய்வுகள் வேறு மாதிரியான முடிவுகளைத் தருகின்றன.

நாம் சாப்பிடும் கொழுப்புச் சத்துகளை நமது உடல் தானே சமன் செய்து கொள்ளும் என்பதால், முட்டை உடல் நலத்தின் மீது செலுத்தும் தாக்கம் பற்றிய விவாதம் இப்போது ஓரளவுக்கு மாறியுள்ளது.

2015 ஆம் ஆண்டில், 40 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற ஆய்வில் உணவு மூலம் கிடைக்கும் கொழுப்பு சத்துக்கும் இருதய நோய்களுக்கும் தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

உணவு முறையில் கொழுப்புச் சத்து எடுத்துக் கொண்டால் அதை நல்ல முறையில் கட்டுப்படுத்திக் கொள்ளும் அமைப்பு மனிதர்களுக்கு உள்ளது. அதை குறைந்த கொழுப்பாக தானாகவே மாற்றிக் கொள்ளும்” என்கிறார் மரியா.

முட்டையில் உள்ள கொழுப்பைப் பொறுத்தவை உடல்நலக் கேடுக்கான ஆபத்து குறைவானதாக உள்ளது.

நமது ரத்த நாளங்களில் ஆக்சிஜனுடன் சேரும்போது கொழுப்பு அதிக கெடுதல்களை ஏற்படுத்தும். ஆனால், முட்டையில் உள்ள கொழுப்பில் ஆக்சிஜன் சேர்வது கிடையாது என்கிறார் பிளெஸ்ஸோ.

ஆக்சிஜன் சேரும் போது கொழுப்புச் சத்து கேடு விளைவிக்கும் - ஆனால் முட்டையில் உள்ள ஆக்சிஜனாக்குதலுக்கு எதிரான சத்துப் பொருட்கள் அப்படி நடக்காதவாறு தடுக்கின்றன.

மேலும், சில கொழுப்புகள் உண்மையில் நமக்கு நல்லவை. அதிக அடர்வு கொண்ட கொழுப்புப் புரதம் (எச்.டி.எல்.) கொழுப்பு கல்லீரலுக்குச் செல்கிறது. அங்கே அது சிதைக்கப்பட்டு உடலில் இருந்து அகற்றப்படுகிறது. ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுத்து, இருதய நோய்கள் வராமல் எச்.டி.எல். கொழுப்பு தடுக்கிறது என்று கருதப்படுகிறது.

“ரத்தத்தில் சேரும் கொழுப்பு பற்றியே மக்கள் கவலைப்பட வேண்டும். அதுதான் இருதய நோய்களை ஏற்படுத்துகிறது,” என்று பெர்னான்டஸ் குறிப்பிடுகிறார்.

நம்மில் பெரும்பாலானோர், கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்புடன், நாம் சாப்பிடும் கொழுப்பையும் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. கொழுப்புப் பொருட்களை சாப்பிடும் போது நம்மில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு கொழுப்பு அளவு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று பிளெஸ்ஸோ கூறுகிறார்.

மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள், முட்டைகள் சாப்பிட்ட பிறகு எல்.டி.எல். அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

அதிக எடை கொண்டவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு எல்.டி.எல். அதிகரிப்பு குறைவாகவும், எச்.டி.எல். மூலக்கூறுகள் அதிகமாகவும் இருக்கும் என்கிறார் பிளெஸ்ஸோ. எனவே நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அதிக எடையாக இருப்பவர்களைவிட முட்டை உங்களுக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

தினமும் கூடுதலாக அரை முட்டை சாப்பிட்டால் இருதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் ஏற்படும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தினமும் கூடுதலாக அரை முட்டை சாப்பிட்டால் இருதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் ஏற்படும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முட்டைகள் நமது உடல்நலத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்ற சமீபத்திய ஒருமித்த கருத்துக்கு எதிராக, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவு உள்ளது.

30,000 பெரியவர்களை சராசரியாக 17 ஆண்டுகள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். தினமும் கூடுதலாக அரை முட்டை சாப்பிட்டால் இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது, மரணத்துக்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

முட்டைகளின் தாக்கத்தைத் தனியாகக் கண்டறிவதற்காக, ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கங்களையும், ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகளையும் அவர்கள் கண்காணித்தனர்.

”ஒருவர் தினமும் கூடுதலாக 300 மி.கி. கொழுப்பு சாப்பிட்டால், அது எந்த வகையில் வந்ததாக இருந்தாலும், இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 17 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும், மரணத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்து 18 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும் நாங்கள் கண்டறிந்தோம்,” என்று இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒருவரும் அமெரிக்காவில் இல்லினோய் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் நோய்த் தடுப்பு மருந்து துறை இணைப் பேராசிரியருமான நோர்ரினா ஆலன் கூறியுள்ளார்.

”தினமும் கூடுதலாக அரை முட்டை சாப்பிட்டால் இதய நோய் வருவதற்கான ஆபத்து 6 சதவீதம் அதிகரிக்கிறது, மரணத்துக்கான ஆபத்து 8 சதவீதம் அதிகரிக்கிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்,” என்கிறார் அவர்.

இதய நோய்களுக்கும் முட்டைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து நடந்த மிகப் பெரிய அளவிலான ஆய்வாக அது இருந்தாலும், அதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பது கவனிக்கப்பட்டது.

....... ஆனால் இருதய நோய்களுக்கான ஆபத்து குறைவாக உள்ள உணவாக முட்டைகள் உள்ளன என்று மற்ற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இருதய நோய்களுக்கான ஆபத்து குறைவாக உள்ள உணவாக முட்டைகள் உள்ளன என்று மற்ற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

பங்கேற்றவர்கள் எப்போது முட்டை உட்கொண்டோம் என்று தாங்களாக அளிக்கும் தகவல்களை மட்டுமே சார்ந்ததாக இருந்தது. 31 ஆண்டுகள் வரை அவர்களுடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டது. காலப்போக்கில் நமது உணவுப் பழக்கம் மாறுபடும் என்றாலும், ஆய்வில் பங்கேற்றவர்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உட்கொண்ட உணவுகள் பற்றிய தகவல்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்திருப்பது தெரிகிறது.

மேலும் முன்பு கண்டறியப்பட்ட விஷயங்களுக்கு முரணாக இந்த ஆய்வு உள்ளது. இதய ஆரோக்கியத்துக்கு முட்டைகள் நல்லது என்று நிறைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் 5 லட்சம் பெரியவர்களிடம் நடத்திய முந்தைய ஆய்வின் முடிவுகள் 2018ல் வெளியிடப்பட்டன. முட்டைகள் சாப்பிடுவது இதய நோய்க்கான ஆபத்துகளைக் குறைக்கிறது என்று நேர் எதிரான முடிவு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமும் முட்டை சாப்பிடுபவர்கள் இதய நோயால் மரணம் அடைவதற்கான ஆபத்து, முட்டை சாப்பிடாதவர்களைவிட 18 சதவீதம் குறைகிறது, அதேபோல பக்கவாத பாதிப்பில் ஏற்படும் உயிரிழப்பு முட்டை சாப்பிடாதவர்களைவிட, முட்டை சாப்பிடுபவர்களுக்கு 28 சதவீதம் குறைகிறது என்றும் அதில் தெரிய வந்துள்ளது.

முந்தைய ஆய்வைப் போல, இதுவும் கண்காணிப்பு வகையில் நடந்த ஆய்வுதான். அதாவது காரணம் மற்றும் தாக்கத்தை குறை கூறுவது சாத்தியமற்றது. னாவில் ஆரோக்கியமான பெரியவர்கள் அதிக முட்டைகள் சாப்பிடுகிறார்களா, அல்லது முட்டை சாப்பிடுவதால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா? அது பெரிய குழப்பம் தான்.

நமது ஆரோக்கியத்தில் முட்டையில் உள்ள கொழுப்புச் சத்து என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய விவாதத்தை இந்த ஆய்வுகள் மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், நோயின் ஆபத்தை முட்டைகள் எப்படி பாதிக்கும் என்பதை அறிய நாம் சில வழிகளை அறிந்திருக்கிறோம்.

முட்டையில் உள்ள கோலின் என்ற சேர்மம் அல்சைமர் என்ற முளை செல்களின் இறப்பு நோயில் இருந்து நம்மைக் காப்பாறற உதவும். அது கல்லீரலையும் பாதுகாக்கிறது.

முட்டைகளில் காணப்படும் கோலின், அல்சைமர் நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றும் .
முட்டைகளில் காணப்படும் கோலின், அல்சைமர் நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றும் .

ஆனால் அது எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். கோலின் சேர்மம் குடலில் நுண்ணுயிர் தொகுப்புகளில் டி.எம்.ஓ. என்ற மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு, பிறகு கல்லீரலில் கிரகிக்கப்படுகிறது. பிறகு இருதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்வதில் தொடர்புடைய டி.எம்.ஏ.ஓ. மூலக்கூறுகளாக மாற்றப்படுகிறது.

முட்டைகள் மூலம் நிறைய கோலின் சாப்பிடுவது டி.எம்.ஏ.ஓ. அளவை அதிகரிக்கச் செய்யும் என்று பிளெஸ்ஸோ அஞ்சுகிறார். கண்காணிப்பில் இருந்தவர்களில் முட்டைகள் சாப்பிட்டு 12 மணி நேரம் வரை டி.எம்.ஏ.ஓ. அதிகமாக இருந்தது என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

முட்டை சாப்பிடுதல் மற்றும் டி.எம்.ஏ.ஓ. தொடர்பை மதிப்பிடுதலுக்கான ஆராய்ச்சி, இதுவரை டி.எம்.ஏ.ஓ. நிலையில்லாமல் அதிகரித்திருப்பதை மட்டுமே கண்டறிந்துள்ளது. அடிப்படை அளவில் இருதய நோய்களைக் கண்டறிவதற்கான அடையாளமாக மட்டுமே டி.எம்.ஏ.ஓ. மதிப்பீடு செய்யப்படுகிறது.

நாம் முட்டைகள் சாப்பிடும் போது, கோலினின் பயன்தரும் தாக்கங்கள் நமக்கு கிடைப்பதால் இது நிகழக்கூடும் என்கிறார் அவர்.

முட்டைக் கருவில் லியூட்டெயின் அதிகமாக கிடைக்கிறது. நல்ல பார்வைத் திறன் அளிப்பதில் இதற்குத் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
முட்டைக் கருவில் லியூட்டெயின் அதிகமாக கிடைக்கிறது. நல்ல பார்வைத் திறன் அளிப்பதில் இதற்குத் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

”ரத்தத்தில் கோலின் கிரகிக்கப்படாமல், பெருங்குடலுக்கு செல்வதுதான் பிரச்சனைக்குரியது. அங்கு அது டி.எம்.ஏ.வாகவும், பிறகு டி.எம்.ஏ.ஓ.வாகவும் மாறுகிறது,” என்கிறார் பெர்னான்டஸ்.

”ஆனால் முட்டைகளில் கோலின் கிரகிக்கப்பட்டு, பெருங்குடலுக்குச் செல்வதில்லை. எனவே அது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதில்லை,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதற்கிடையில், முட்டைகளின் ஆரோக்கிய பயன்களைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். முட்டைக் கருவில் லியூட்டெயின் அதிகமாக கிடைக்கிறது. இது நல்ல பார்வைத் திறன் அளிக்கவும், கண் நோய்கள் வரும் ஆபத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கும் நிறமியாகும்.

முட்டைகள் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்று புரிந்து கொள்வதில் ஆய்வாளர்கள் இன்னும் நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டும். அவை உடல்நலத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும் நமக்கு பயன்களைத்தான் தருகிறது என்றும் பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

அப்போதும் கூட, தினமும் காலை உணவாக முட்டைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது. முட்டைகளை மட்டுமே தனியாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக, கலவையான உணவுப் பட்டியலை நாம் கொண்டிருக்க வேண்டும்..

Advertisements