சென்னை | செப் 26 – 2019
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை பல்வேறு மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் மழையின் தாக்கம் இல்லை.
ஆந்திராவில் வடக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி கர்நாடகாவை நோக்கி சென்றதன் காரணமாக, மழை படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கின்றது.
சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் மதுக்கூர், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கொடைக்கானல் மற்றும் ஷோலிங்கரில் தலா 5 செ.மீ., சமயபுரம், சோழவந்தான், உதகை, காரைக்குடி, மேட்டுப்பட்டி, பேரையூர், விருதுநகரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், நாகர்கோவில், கொளச்சல், மன்னார்குடி, குழித்துறை, தக்கலை, இரணியல், சிவகங்கை பகுதிகளில் தலா 3 செ.மீ மழைவாகியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
My Thondi.Com Team