தொண்டி | செப்டம்பர், 29
தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நம் காவல் பார்வை பொறுப்பு இணை ஆசிரியர் கிங் பீட்டர் தலைமையில் நடைபெற்றது
இதில் தொண்டி காவல்துறை ஆய்வாளர் முகம்மது நசீர்,
காவல்துறை சார்பு ஆய்வாளர் காமாட்சி நாதன்
நம் காவல் பார்வை பத்திரிக்கையின் ஆசிரியர் AK ரெட்டி,
நம் காவல் பார்வை தலைமை சட்ட ஆலோசகர்
உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் உள்ளிட்டோர்
பொதுமக்களிடத்திலும் வாகன ஓட்டுநர்களிடத்திலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்கள்
இந்த நிகழ்வில்
நம் காவல் பார்வை நிருபர்கள்
ஜெயபால், சீனி, தமிழ்செல்வன் ஆகியோரும் மேலும் ஏராளமான பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கலந்து கொண்டனர்.
