“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 6

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 6

தேதி : 20-09-2017

………………………………………………

​ஐரோப்பியர்களின் சூழ்ச்சி வலை

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி.

கி.பி 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது.

கி.பி 1601 ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வணிகம் என்ற பெயரில் முதன்முதலாக வருகை தந்தனர். அன்றைய சிறு குறு நில ஆட்சியாளர்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டில் உறுதியாக கால் பதித்தனர்.

சூழ்ச்சி வலை.

கி.பி 1612 ல் அன்றைய இந்தியப் பேரரசின் சக்கரவர்த்தியாக விளங்கிய மாமன்னர் ஜஹாங்கீரின் அரசவைக்கு ஆங்கிலேய அரசின் பிரதிநிதிகள் வருகைப் புரிந்தனர். 

பிரிட்டீஷ் அரசரான முதலாம் ஜேம்ஸ் மன்னரின் கடிதத்தோடு வந்ததாலும் இந்திய மக்களின் பொருளாதார வளர்ச்சி என்று ஆங்கிலேயர்கள் அளித்த வாக்குறுதிகளாலும் நல்லெண்ண அடிப்படையில் வியாபாரம் செய்யவும் தொழிற்சாலைகள் அமைக்கவும் மாமன்னர் அவர்களுக்கு அனுமதியளித்தார்.

ஆனால் நயவஞ்சகம் நிறைந்த ஆங்கிலேயர்கள் தந்திரமாக இந்தியப் பேரரசிற்கெதிராக சதி வலைகளைப் பின்ன ஆரம்பித்தனர்.

கி.பி 1700 வரை கிழக்கிந்தியக் கம்பெனி ஒரு வியாபார நிறுவனமாகவே செயல்பட்டு வந்தது. 1700 களுக்கு மேல் ஆங்கில ஆட்சியாளர்கள் அதனை ஒரு தனியான அதிகாரம் பெற்ற அமைப்பாக ஆக்கினர். இது இன்னும் இந்தியாவின் மீது ஆங்கிலேயர் தங்கள் ஆதிக்கத்தை உண்டாக்க காரணமாக அமைந்தது.

உள் நாட்டு குழப்பங்கள்.

முகலாய இந்தியப் பேரரசின் ஆட்சியில் அதுவரை தனித்தனி சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த அரசுகள் அனைத்தும் ஒரே அரசாக ஒன்றிணைக்கப்பட்டு சாதி மத பிளவுகளின்றி ஒரே மாதிரியான நிர்வாக முறை அமுல்படுத்தப்பட்டது.

இது குடிமக்களுக்கு ஒரு சிறந்த வாழ்வைத் தந்தாலும் அதுவரை மக்களை அடிமைகளாக ஆக்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டி, உயர்குலம் தாழ்ந்த குலம் எனப் பிரித்து சுகபோகமாய் வாழ்ந்த சிற்றரசர்களுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது. எனவே அவர்கள் இந்தியப் பேரரசிற்கெதிராக பெரும் சூழ்ச்சி எண்ணம் கொண்டிருந்தனர்.

வலையில் வீழ்ந்தனர்.

இந்தியப் பேரரசிற்கெதிராக பெரும் சூழ்ச்சி எண்ணம் கொண்டிருந்த இந்த சிற்றரசர்களை ஆங்கிலேயர்கள் மேலும் தூண்டிவிட்டனர். இவர்களை இந்தியாவை முழுமையாகக் கைப்பற்றும் தங்களது எண்ணத்தை நிறைவேற்ற பகடைக் காய்களாக பயன்படுத்தினர்.

ஆட்சியில் பங்கு, பெறும் செல்வம் என்பன போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களைக் கொண்டே தங்களை எதிர்க்கும் இஸ்லாமிய அரசர்கள், நவாப்புகள், பாளையக்கார்ர்கள் போன்றவர்களை வீழ்த்தினர்.

சுகபோகத்தையும் செல்வத்தையும் விரும்பிய அம்மன்னர்களும் சில படைத்தளபதிகளும் ஆங்கிலேயர்களோடு கைகோர்த்துக் கொண்டு உண்மையான தேசப் பற்றும் சுதந்திர உணர்வும் கொண்ட அரசர்களையும் அரசுகளையும் எதிர்த்தனர்.

…………………………………………………………………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s