“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 4

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 4

தேதி : 17-09-2017

……………….

​அடக்குமுறைக்கெதிராக அமைதியின் பிரவேசம்.

இஸ்லாத்திற்கு முன் இந்தியா

இஸ்லாமிய வருகைக்கு முன் இந்தியா என்ற நாடே இருக்கவில்லை. இந்த பரந்த நிலப்பகுதி முழுவதும் சிறு சிறு பகுதிகளாக பிரிந்து கிடந்தது.

கி.மு 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கைபர், போலான் கணவாய் வழியாக இந்தியாவின் மீது படையெடுத்த ஆரியர்கள் பார்ப்பானியர்கள் தேசத்தின் மூத்த குடிமக்களை திராவிடர்கள் அல்லது திராவிட இனம் சார்ந்தவர்கள்.

தங்களது மதம், கலாச்சாரத்தைப் புகுத்தி சாதி, வர்ணாசிரம கொள்கைகளை பரப்பினர். தங்களை மட்டுமே உயர்ந்தவர்கள் எனவும் மற்றவர்களை தாழ்ந்தவர்கள் எனவும் ஆக்கினர். தாங்களே ஆட்சி செய்ய தகுதியானவர்கள் என குலப்பெருமை பேசினர்.

இந்தியாவின் பூர்வக்குடிமக்கள் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டனர். கடவுள் வழிபாடு மறுக்கப்பட்டது. அவர்கள் தொட்டாலே அசுத்தம் என ஆக்கப்பட்டது. காலில் செருப்பு அணியக் கூடாது, நேருக்கு நேர் நின்று பேசக்கூடாது. அவர்களின் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன.

பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என தங்களது மானத்தை மறைப்பதற்குக் கூட உரிமை மறுக்கப்பட்டது. கணவன் இறந்துவிட்டால் அவனோடு சேர்த்து மனைவியையும் எரிக்கப்பட்டது.

ஆனால் இஸ்லாத்தின் கோட்பாடுகளோ இதற்கு முற்றிலும் மாற்றமாக இருந்தன. இஸ்லாத்தில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற ஏற்றத்தாழ்வு நிலை இல்லை. பெண்கள் உயர்ந்த நிலையில் மதிக்கப்பட்டனர். அவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட்டது.

எனவே தான் இஸ்லாமிய ஆட்சி முறையின் நீதத்தையும் ஒழுக்கத்தையும் கண்ட இந்திய மக்கள் தங்களது பழைய ஆட்சியாளர்களின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க இஸ்லாத்தையும் இஸ்லாமிய ஆட்சி முறையையும் விரும்பி ஏற்றனர். தங்களது ஆட்சியாளர்களுக்கு எதிராக இஸ்லாமியப் படைகளுக்கு உதவி செய்தனர்.

இந்தியாவில் 800 ஆண்டுகள் ஆட்சி செய்த வரலாற்றில் அரசர்கள் எதிர்த்தனர் என்பதைத் தவிர்த்து  பொது மக்கள் இஸ்லாமிய அரசர்களுக்கெதிராக கலகம் செய்தனர் என்று எங்கும் காணப்படவில்லை. இதுவே இஸ்லாமிய அரசின் நீதத்திற்கு ஒரு சான்றாகும்.

ஹுமாயூனின் கடிதம்

பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது.

போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர் எழுதியதாவது:-

ஓ என் மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு ராஜாக்களின் ராஜாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். கீழ்வரும் கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.

மத உணர்வுக்கு உரிய மதிப்புக் கொடு.

மத மாச்சரியங்களுக்கு உனது மனது ஆட்பட அனுமதிக்காதே. சார்பற்ற நீதி வழங்கு.

 2. பசுக்களைக் கொல்வதைத் தவிர்த்துவிடு. இது இந்திய மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க உனக்கு உதவும். இதன் மூலம் நன்றிக் கடனாய் நீ இந்த மக்களுடன் பிணைக்கப்படுவாய்.

3. எந்த ஒரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையும் நீ சிதைக்கக் கூடாது. எப்போதுமே நீதியை நேசிப்பவனாக இரு.

அது ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவைப் பராமரிக்கும். அதன்மூலம் பூமியில் அமைதியும் திருப்தியும் நிலவும்.

4. இஸ்லாமைப் பரப்பும் பணியை ஒடுக்குமுறை வாளால் செய்வதைவிட அன்பு வாளால் செய்வது நல்லது.

5. ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புறக்கணித்திடு. இல்லையெனில் அது இஸ்லாமிற்கு பலவீனத்தைத் தரும்.

6. உனது குடிமக்களிடம் உள்ள பல்வேறுபட்ட தனித்தன்மைகளை காண ஓராண்டில் வரும் பல்வேறு பருவங்களாகப் பார். அதுவே அரசு நிர்வாகத்தில் வியாதியைக் கொண்டு வராது.

இவ்வறிவுரை ஹுமாயூனுக்கு மட்டுமல்ல. அவர் வழிவந்தவர்களும் அவுரங்கசீப்பின் ஆரம்ப நாட்கள் வரை கடைப்பிடிக்கப் பட்டிருப்பது வரலாறு.

இந்தக் காலங்களில் கோயில்கள் இடிக்கப்படவில்லை. பசுவதை தவிர்க்கப்பட்டுள்ளது. பாபர்,  அவரது மகன் ஹிமாயூன்,  அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்பதன் மூலமே இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s