தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்

தொண்டி: தொண்டி பேரூராட்சித் துணைத்தலைவர் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பான சம்பவம் தொண்டியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொண்டியில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியினர், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால் ஏற்பட்ட விவகாரத்தில், ராஜேந்திரன் நாம் தமிழர் கட்சியினருடன் தொலைபேசி வழியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் ஹிந்து பரிபாலன சபை குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திரன் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்தனர். ஆனால்,

போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், நேற்று இரவு 7:30 மணியளவில் காவல் நிலையம் முன்பு இரு சமூக மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், போராட்டக்காரர்கள் பின்னர் கலைந்து சென்றனர்

Leave a comment