அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்

இராமேஸ்வரம்: இந்தியாவின் மகத்தான விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 93-வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இராமேஸ்வரம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மினி மாரத்தான் போட்டி துவங்கி வைக்கப்பட்டது.

இப்போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு டாக்டர். கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

#அப்துல்கலாம் #இராமேஸ்வரம் #மினிமாரத்தான் #பிறந்தநாள்

Leave a comment