மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்புக் கூட்டம்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவா் அவா்கள் தலைமையில் 16.11.2018 (வெள்ளிக்கிழமை)அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் (அரசு திட்டங்கள் பெற) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று கீழ்கண்டவற்றில் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை (PHP), மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை (MG), வங்கிக்கடன் குறைகள், இலவச தொழில் பயிற்சி ( Skill Developement Training), இலவச வீட்டு மனை பட்டா, இலவச தொகுப்பு வீடு மற்றும் பசுமை வீடு, பாரத பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டம் மற்றும் உதவி உபகரணங்களாகிய இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, ஒளி உருப்பெருக்கி, ஒளிரும் மடக்கு குச்சி, கருப்பு கண்ணாடி, பிரெய்லி கைகடிகாரம், ஊன்றுகோல், நவீன செயற்கை கால், கால் தாங்கிகள், நடைப்பயிற்சி உபகரணம், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி.

சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு வரும்போது தங்களின் கோரிக்கை மனுவுடன், அடையாள அட்டை நகல், ரேஷன் காா்டு நகல், ஆதாா் அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 ஆகியவற்றை இணைத்து கொண்டுவரவும்.

மாவட்ட ஆட்சியருக்காக, (மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், இராமநாதபுரம்).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s