தொண்டி பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவுத் தேர்வு – 2026

“இந்திய விடுதலை வரலாறு (சில மறைக்கப்பட்ட உண்மைகள்)” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, தொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் தொண்டி ஐக்கிய ஜமாஅத் இணைந்து, தொண்டி பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக பொது அறிவுத் தேர்வை நடத்துகின்றன.

இந்தப் போட்டியின் நோக்கம், மாணவர்களிடையே இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்த விழிப்புணர்வு, தேசப்பற்று மற்றும் பொது அறிவை வளர்ப்பதாகும்.

📅 தேர்வு விவரங்கள்

  • தேர்வு நாள்: 07.08.2026 (வெள்ளிக்கிழமை)
  • நேரம்: மதியம் 2.15 மணி முதல் 3.45 மணி வரை
  • தேர்வு முறை: OMR அடிப்படையிலான MCQ தேர்வு
  • மொத்த வினாக்கள்: 50
  • பாடநூல்: இந்திய விடுதலை வரலாறு (சில மறைக்கப்பட்ட உண்மைகள்)

🏆 பரிசளிப்பு விழா

  • நாள்: 15.08.2026 (சனிக்கிழமை)
  • இடம்: தொண்டி மேலப்பள்ளிவாசல் வளாகம்
  • நிகழ்ச்சி: 79-வது இந்திய சுதந்திர தின பொதுக்கூட்டம்

Technology Partner

🌐 MyThondi.Com

தொண்டியின் கல்வி, சமூக மற்றும் பொதுநல முயற்சிகளுக்கான டிஜிட்டல் பங்குதாரர்.