தொண்டி | 13-12-2018 நமது ஊர் தொண்டி எம்.ஆர்.பட்டணம் ஜமாஅத் மற்றும் நமது உறவுகள் அறக்கட்டளை இணைந்து செயல்படுத்த இருக்கும் பள்ளிவாசல் மராமத்துப் பணிகள் மறுசீரமைப்பு மற்றும் வண்ணம் பூசுதல் தொடர்பான பணிகள் இன்று இறைவனின் உதவியால் ஆரம்பமாகியுள்ளது.! MyThondi.Com™ Team.
Category: செய்திகள்
தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்
தனுஷ்கோடி நடந்தது என்ன? ஒரு அற்புத பதிவு,,, டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது… Continue reading தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்
நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.
Sep - 13 | நம்புதாளை. நம்புதாளையில் மேற்கு தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனி நபருக்கு சொந்தமான ஆக்டிவா இரு சக்கர வாகனம் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நம்புதாளையில் வேறு இரு சம்பவங்களில் இதே போல ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டு பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே… Continue reading நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.
கோடை கால பயிற்சி முகாம்
கோடை கால பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 23:04:2018 திங்கட் கிழமை முதல் நமது தொண்டி அமீர் சுல்தான் அகாடெமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 15 நாட்களில் அரபி மொழி படிக்க எழுத பேச கற்றுத்தரப் படுகிறது. தினமும் காலை 9:30 முதல் 12:30 வரையிலும் பயிற்சி நடை பெறும்... தரமான முறையில் திரையின் மூலம் பாடம் கற்பிக்கப்படும்... எனவே அன்பான சகோதரர்கள் இந்த பயிற்சியில் கலந்து குர்ஆனையும்; ஹதீஸையும் பொருள் அறிந்து படிப்பதற்குறிய… Continue reading கோடை கால பயிற்சி முகாம்
தமுமுக சார்பில் கோடையில் நீர் மோர் பந்தல் துவக்கம்
நம்புதாளை | ஏப்ரல் 17 இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை த.மு.மு.க. சார்பில், நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது. முதல் நாளான இன்று மாம்பழ ஜூஸ் வழங்கப்பட்டது..!
காவல் துறை FIR போடவில்லையா..?
காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா??? படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்! ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 1. புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத… Continue reading காவல் துறை FIR போடவில்லையா..?
மருத்துவர்கள் தொலைபேசி எண்கள்
மருத்துவர்கள் பொது மருத்துவர்கள் Dr. ஃபுர்கான் அலி 04561 243009 Dr ஜஃபருல்லாஹ் 94429 86545 Dr துரய் சாமி 04561 253261, 253276 Dr இளங்கோ 99441 03223 Dr மீரா பாய் 99444 36482 Dr சுபைர் கான் 94443 29731 Dr ஜோதி பாசு 94891 78951 பல் மருத்துவர்கள் Dr வேணி BDS 86819 60098 Dr சுரேஷ் பாபு BDS 75982 22847 இந்த பட்டியலில் உங்களது எண்ணையும் இணைக்க… Continue reading மருத்துவர்கள் தொலைபேசி எண்கள்
மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன ? அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.
மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன? பரத் ஷர்மா BBC Tamil 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை என்ற பேரலை வீசியபோது, மெரில் லிஞ்ச் மற்றும் லேமன் பிரதர்ஸ் போன்ற தொழில் சாம்ராஜ்யங்களும் சரிந்து போயின. பங்குச் சந்தைகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அந்த ஆழிப்பேரலையில் இந்தியாவும் தப்பவில்லை. பங்குச்சந்தையில் இருந்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீட்டை திருப்பி எடுப்பது தினசரி வாடிக்கையானது. பலர் வேலைவாய்ப்புகளை இழந்த நிலையில், புதிய வேலைகளுக்கான… Continue reading மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன ? அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.
நம் காவல் பார்வை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தொண்டி | செப்டம்பர், 29 தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நம் காவல் பார்வை பொறுப்பு இணை ஆசிரியர் கிங் பீட்டர் தலைமையில் நடைபெற்றது இதில் தொண்டி காவல்துறை ஆய்வாளர் முகம்மது நசீர், காவல்துறை சார்பு ஆய்வாளர் காமாட்சி நாதன் நம் காவல் பார்வை பத்திரிக்கையின் ஆசிரியர் AK ரெட்டி, நம் காவல் பார்வை தலைமை… Continue reading நம் காவல் பார்வை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மத்திய அரசின் விருதை வென்ற தொண்டி அரசு பள்ளி.
தொண்டி | செப்டம்பர் 20. பள்ளியை துாய்மையாக பராமரித்த தொண்டி அரசு தொடக்க பள்ளிக்கு புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பள்ளி கல்வி எழுத்தறிவு தொடக்கநிலை சார்பில்அரசு தொடக்கபள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளை துாய்மையாக வைத்திருப்பது குறித்துஉத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிக்கும் பள்ளிகளுக்கு சிறந்த விருதான புரஸ்கார் விருது வழங்கபட்டு வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், துாய்மைபடுத்துதல், சுகாதாரம் தொடர்பான நடைமுறைகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு முதலில்… Continue reading மத்திய அரசின் விருதை வென்ற தொண்டி அரசு பள்ளி.