மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.

இராமநாதபுரம் | செப் 27 ஓமன் நாட்டில் வேலை செய்து வந்த நம்புதாளையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம்(வயது 50), ராமநாதன்(38), கே.காசிநாதன்(36), ஆர்.காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 4 பேரும் வழக்கம்போல் கடந்த 16-ந்தேதி பேர் ஒரு படகில் கடலுக்குள்… Continue reading மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.

புதிய ரக நெல் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் இன்று (26.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் TDCM-1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வைத்து, விதை விதைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொகுப்பு My Thondi.Com Team

விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:– மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு… Continue reading விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்

இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளத்தில் சங்க கால நாகரீகத்தின் 13000 எச்சங்கள் காணப்படுகின்றன. கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அழகன்குளம் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. வைகை நதி கடலில் கலக்கும் இக்கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட… Continue reading இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்

கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை | செப் 26 - 2019 தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி,… Continue reading கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.

எங்களை வஞ்சித்து விட்டீர்கள் – உலகத் தலைவர்களை விளாசித் தள்ளிய மாணவி.

ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார். நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா. யார் இந்த கிரெட்டா ? கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி. சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு… Continue reading எங்களை வஞ்சித்து விட்டீர்கள் – உலகத் தலைவர்களை விளாசித் தள்ளிய மாணவி.

நவாஸ் கனி MP யுடன் மத்திய மந்திரி சந்திப்பு

இராமநாதபுரம் | செப் 25 மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர சிங் தாமோர் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். சந்திப்பின் போது இராமநாதபுரம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்கப் பெறவும், விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தும் வண்ணம் புதிய திட்டங்களை வகுக்கவும் வலியுறுத்தினார். தகவல் : MyThondi.Com Team