ஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்

நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019

தேர்வுப் பரிசுகள் லிஸ்ட்

நமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெறும் மாணவ மாணவிகள் பட்டியல். முதல் பரிசு பெறுபவர்கள் A. ஹதீஜத் ரினா S. சாரத் ரியா S. அஸ்ஃபத் நஹ்லா U. ரீமா பர்வீன் A. முஹம்மது ஜாஸிர் H. நூருல் ஆஃபியா R. ஃபரிலத் ஃபாஸிஹா A. ஜாஸிம் அஹ்மத் S.… Continue reading தேர்வுப் பரிசுகள் லிஸ்ட்

தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.

தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நயினார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை காவல் ஆளினர்கள் எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடியில் ஒரு ஆட்டோவை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் ஆட்டோவில் வந்த 1) சத்யராஜ்… Continue reading தொண்டி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்.

தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.

தொண்டி | 10-12-2018 கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. பலர் வீடுகளை இழந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின. எனவே டெல்டா பகுதிகளை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நமது தொண்டியில் இருந்தும் அனைத்து ஜமாஅத்துகளின் கூட்டமைப்பான ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் நிவாரண நிதி மக்களிடம் வசூல் செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 05-12-2018… Continue reading தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.

உறவுகள் அறக்கட்டளை மூலம் பள்ளிவாசல் சீரமைப்பு.

தொண்டி | 13-12-2018 நமது ஊர் தொண்டி எம்.ஆர்.பட்டணம் ஜமாஅத் மற்றும் நமது உறவுகள் அறக்கட்டளை இணைந்து செயல்படுத்த இருக்கும் பள்ளிவாசல் மராமத்துப் பணிகள் மறுசீரமைப்பு மற்றும் வண்ணம் பூசுதல் தொடர்பான பணிகள் இன்று இறைவனின் உதவியால் ஆரம்பமாகியுள்ளது.! MyThondi.Com™ Team.

தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !? நமது தொண்டியில் கடந்த செவ்வாய் முதல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் INDIA1™ என்ற பெயரில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கி உள்ளது. ஏற்கனவே நமது தொண்டியில் ஐந்து (பணமே இருக்காத) ஏடிஎம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வங்கிகளோடு இணைந்தே உள்ளன. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏடிஎம் எந்த வங்கியோடும் இணைந்தது அல்ல..!! அப்படியானால் இது பாதுகாப்பானதா… Continue reading தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி. தொண்டியில் புதிய ஏடிஎம்(ATM) உதயம். தொண்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் புதிதாக இன்று 28-11-2018 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது * இந்தியா1 ஏடிஎம். இந்த ATM மெஷினின் பயன்பாடுகள்: ⏰24 மணி நேர சேவை 💳 அனைத்து வங்கி ATM கார்டுகளையும் பயன்படுத்தலாம். 💳 பணம் எடுப்பதற்க்கும் ,வங்கி இருப்பித் தொகை சரிபார்ப்பதற்கும் உபயோகிக்கலாம். 💳ஒரு முறை பரிவர்த்தனையில் ரூ.100… Continue reading தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.

தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்

தனுஷ்கோடி நடந்தது என்ன? ஒரு அற்புத பதிவு,,, டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது… Continue reading தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்

கஜா புயல் – முழூ விபரம்

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது, நாகை முதல் வேதாராண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: கஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி நாளை தீவிரப்புயலாக மாறும். ஆனால், தமிழகக்… Continue reading கஜா புயல் – முழூ விபரம்