கஜா புயல் – முழூ விபரம்

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது, நாகை முதல் வேதாராண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: கஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி நாளை தீவிரப்புயலாக மாறும். ஆனால், தமிழகக்… Continue reading கஜா புயல் – முழூ விபரம்

கஜா புயல் எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 15ஆம் தேதி நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ============++++=========== செய்தி : MyThondi.Com Team 🖊📝

மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்புக் கூட்டம்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அறிவிப்பு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவா் அவா்கள் தலைமையில் 16.11.2018 (வெள்ளிக்கிழமை)அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் (அரசு திட்டங்கள் பெற) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று கீழ்கண்டவற்றில் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை (PHP), மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை (MG), வங்கிக்கடன்… Continue reading மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்புக் கூட்டம்.

Thondi to Pattukkottai Route Buses

தொண்டியிலிருந்து ➡️ SP பட்டிணம் ➡️ மீமிசல் வழியாக பட்டுக்கோட்டை - அறந்தாங்கி ➡️ நாகப்பட்டினம் ➡️ சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் புறப்படும் நேரம் --- பேருந்து விபரம் --- செல்லும் ஊர் அதிகாலை 03.15 AM --- அரசுப் பேருந்து --- பட்டுகோட்டை 04.40 AM --- அரசுப் பேருந்து --- பட்டுகோட்டை 05.30 AM --- அரசுப் பேருந்து --- தஞ்சாவூர் 05.50 AM --- அரசுப் பேருந்து --- நாகூர் 06.10… Continue reading Thondi to Pattukkottai Route Buses

தன்னிகரற்ற சேவைக்காக தமிழரை கௌரவித்த கூகுள்.

தொண்டி | 30 - 09 - 2018 கண் மருத்துவ சேவைக்காக ஒரு தமிழனை கௌரவப்படுத்தியிருக்கிறது கூகுள். டாக்டர் கோவிந்தப்பா வேங்கடசாமி, பிரபல கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரான இவரின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு இவரது கண் மருத்துவ சேவையை கௌரவப்படுத்தும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது. டாக்டர் வீ (Doctor V) என சக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் கோவிந்தப்பா வேங்கடசாமி அவர்கள் 1918 ஆம்… Continue reading தன்னிகரற்ற சேவைக்காக தமிழரை கௌரவித்த கூகுள்.

நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.

தொண்டி | செப்டம்பர் 15 தொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக தொண்டி பெரிய பள்ளிவாசலில் சிறப்பு மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் மௌலானா அப்துல் ஜப்பார் யூசுஃபீ அவர்கள் தலைமை வகித்தார்கள். தொண்டி அனைத்து தெரு ஜமாஅத்துகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொண்டி நயீமிய்யா அரபுக் கல்லூரி மாணவர் R. முஹம்மது அப்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.… Continue reading நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.

நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.

Sep - 13 | நம்புதாளை. நம்புதாளையில் மேற்கு தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனி நபருக்கு சொந்தமான ஆக்டிவா இரு சக்கர வாகனம் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நம்புதாளையில் வேறு இரு சம்பவங்களில் இதே போல ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டு பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே… Continue reading நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.

தொண்டியில் த த ஜ ஆலோசனை சந்திப்பு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தொண்டி இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக 07.09.2018 நடைபெற்ற சமகால நிகழ்வுகள் சம்மந்தமாக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்து. இதில் 280 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள் E.ஃபாருக் ( மாநிலச் செயலாளர்) அப்துர்ரஹ்மான் (மாநிலத் துணைத் தலைவர்) அப்துல்ஹமீது (மாநிலத் தணிக்கைக் குழு தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தார்கள். சரியாக மாலை 05.00 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு 12 :00 மணிவரை… Continue reading தொண்டியில் த த ஜ ஆலோசனை சந்திப்பு.

கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ்

கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ் சேவை செய்ய காத்திருக்கிறார் நாம் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டும் போதும் தொண்டியை குட்டி கேரளாவாக மாற்றி விடுவார் சமூக ஆர்வளர் பியூஸ் மனுசை தெரிந்து வைத்திருக்கும் நாம் நம் மாவட்டத்தை நம் தொண்டி சேர்ந்த நம் ஊரை பசுமையாக்க பல வருடங்களாக பாடுபடும் இவரை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் யார் இந்த சதீஸ் ? இவர் ஒரு படித்த பட்டதாரி தொண்டியை சேர்ந்தவர் திருவாடானையில் உள்ள… Continue reading கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ்

தொண்டியில் பெருநாள் தொழுகை

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நமது தொண்டியில் அனைத்து தெரு ஜமாஅத் சார்பாக நமதூர் மேலப்பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/MERTHbeWuC4 தொண்டி பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி S. முஹம்மது காசிம் யூசுஃபீ அவர்கள் தொழுகை நடத்த, தொண்டி மேலப்பள்ளிவாசல் இமாம் மௌலவி A. முஹம்மது ஹனீஃப் ஜமாலி அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார். இறுதியாக மௌலானா மௌலவி H. முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் துஆ செய்தார்கள். இதில் ஆண்கள்,… Continue reading தொண்டியில் பெருநாள் தொழுகை