அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்

இராமேஸ்வரம்: இந்தியாவின் மகத்தான விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 93-வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இராமேஸ்வரம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மினி மாரத்தான் போட்டி துவங்கி வைக்கப்பட்டது. இப்போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு… Continue reading அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்

தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்

தொண்டி: தொண்டி பேரூராட்சித் துணைத்தலைவர் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பான சம்பவம் தொண்டியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தொண்டியில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியினர், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால் ஏற்பட்ட விவகாரத்தில், ராஜேந்திரன் நாம் தமிழர் கட்சியினருடன் தொலைபேசி வழியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் ஹிந்து பரிபாலன சபை குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திரன்… Continue reading தொண்டியில் ஆடியோவால் சர்ச்சை: பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் மீதான புகாரால் பதற்றம்

தொண்டி பகுதியில் BSNL நெட்வொர்க் தடை: வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற எண்ணம்

தொண்டி பகுதியில் பல நாட்களாக BSNL நெட்வொர்க் சேவை முழுமையாக செயலிழந்து இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் தினசரி தொடர்புகளிலும், தொழில் சார்ந்த பணிகளிலும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, பி.எஸ்.என்.எல். சொத்துகள் நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்யப்பட்டதால், இந்த நெட்வொர்க் பிரச்சினை உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்இந்த நெட்வொர்க் தடையின் காரணமாக, வாடிக்கையாளர்கள் இன்றியமையாத தொலைபேசி அழைப்புகளையும், இணைய சேவையையும் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். வேலையுடன் தொடர்புடைய மற்றும் தனிப்பட்ட… Continue reading தொண்டி பகுதியில் BSNL நெட்வொர்க் தடை: வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற எண்ணம்

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.

BSNL, MTNL ஆகிய நிறுவனங்கள் மூடப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என BSNL நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. BSNL பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில ஊடகங்களில் BSNL நிறுவனம் மூடப்படப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மைக்குப் புறம்பானதாகும். தற்போது நிறுவனத்தின் நிதி நிலையை சரி செய்ய VRS திட்டம் மற்றும் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய திட்டங்களும், நிறுவனத்தின் அதிக சொத்துக்களை விற்பனை செய்யும்… Continue reading வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.

ஜியோ வைத்த அடுத்த ஆப்பு.

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்கிற மாதிரி கொடுத்து விட்டு பின்னால் அதற்கு வசூல் செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் தெரிந்தும் அதில் மாட்டிக்கொள்வது தான் நமது மக்களின் பழக்கமாகும். ஜியோ நிறுவனம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, முதலில் சிம் கார்டுகளை இலவசமாக கொடுத்தனர். 4G அமைப்புடன் வந்த இந்த சிம் கார்டுகளால் 4G தரம் கொண்ட… Continue reading ஜியோ வைத்த அடுத்த ஆப்பு.

ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு

தீபாவளி பண்டிகைக்கு ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்குவது உள்ளிட்ட ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி,… Continue reading ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு

ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி

2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் நாளை (10-10-2019) முதல் விண்ணப்பிக்கலாம் என ஹஜ் கமிட்டி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2020 ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்ஷாஅல்லாஹ்10-10-2019 முதல் 10-11-2019 வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது.இந்த வருடம் 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் விண்ணப்பம் வசதி மட்டுமே உள்ளது. எனவே அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.வழிகாட்டி விபரங்களை http://hajcommittee.gov.in/ என்ற இந்திய ஹஜ் குழு இணைய தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலமாக ஹஜ்… Continue reading ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி

லலிதா ஜுவல்லரி திருட்டின் பலே கில்லாடி | யார் இந்த திருவாரூர் முருகன் ?

திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடையில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளை போட்டு 28 கிலோ தங்க நகைகளை திருடப்பட்டது.இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து திருடிய வீடியோக்கள் வெளியாகிய நிலையில் கொள்ளை நடந்த 48 மணிநேரத்தில் கொள்ளையர்களை திருவாரூர் பகுதியில் வாகனசோதனையின் போது டூவிலரில் சென்று கொண்டிருந்த இருவரை மறித்த போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டுள்ளான்.மற்றொரு திருடன் சுரேஸ் தப்பியோடினார். மணிகண்டனை பிடித்த போது அவனிடம் இருந்த மூட்டையில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது. அந்த… Continue reading லலிதா ஜுவல்லரி திருட்டின் பலே கில்லாடி | யார் இந்த திருவாரூர் முருகன் ?

பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32

இந்திய துணைக் கண்டத்தோடு இராமேஸ்வரம் தீவை சாலை வழியாக இணைக்கும் பாம்பன் (அன்னை இந்திரா காந்தி) பாலத்திற்கு வயது 32. மண்டபம் - பாம்பன் இடையே உள்ள கடல் மீது சுமார் 2.32 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதத்தில் ரூ 19.26 கோடி மதிப்பீட்டில் 72 தூண்களுடன் நிறுவப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். மிகுந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக,… Continue reading பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32