மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம் :- மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு படகுக்கும் அரசால் மாதம் தோறும் 1500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலுள்ள 10 இரும்பு படகுகளுக்கு மட்டும் மானிய டீசல் வழங்கப்படவில்லை. விசைப் படகுகளில் 10 படகுகள் இரும்பால் ஆன படகுகளாக உள்ளதால் அந்த படகுகளுக்கு மட்டும் அரசால் வழங்கப்பட்டு வரும் மானிய… Continue reading மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தனியாரிடம் செல்கிறது இந்திய ரயில்வே.

சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சகத்தின் 100 நாட்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது. அதன்படி, டில்லி மும்பை, டில்லி ஜம்மு, காட்ரா, டில்லி – ஹவுரா, செகந்திராபாத் – ஐதராபாத், செகந்திரபாத் – டில்லி, டில்லி –… Continue reading தனியாரிடம் செல்கிறது இந்திய ரயில்வே.

RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக்‌ காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றினார்.அதில், ‘காந்தியடிகளைத் தவிா்த்து, ஆா்எஸ்எஸ் அமைப்பை இந்தியாவின் அடையாளமாக்க அவா்கள் முயற்சிக்கின்றனா்.இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சம்பவங்களைக் கண்டிருந்தால், காந்தியடிகளின் ஆத்மா சோகத்தில் துடித்திருக்கும்.பொய்ப் பிரசாரங்கள் மூலம் அரசியல் செய்பவா்கள், காந்தியடிகள் உண்மையைக் கடைப்பிடித்தவா் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வாா்கள்? ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் நபா்கள், காந்தியடிகளின் சுயராஜ்ஜியத்தை எவ்வாறு புரிந்து… Continue reading RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக்‌ காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்

சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோர் கவனிக்க.

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 7 மற்றும் 8-ம் தேதி ஆயுதப்பூஜை, விஜயதசமி பண்டிகை என்பதாலும் அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாகும். இதனால் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக 6,145 சிறப்பு… Continue reading சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோர் கவனிக்க.

இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.

இராமநாதபுரம் | அக் 02 - 2019 நமது பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு நவாஸ் கனி அவர்கள் நமது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாக தொகுதி முழுவதும் உள்ள இளைஞர்களை இணைத்து அதன் மூலம் பொது சமூக பணிகளை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் இதுபற்றி கூறக்கூடிய காணொளி உங்களுக்காக.. தன்னார்வலர்களாக இணைய விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர் விவரங்களை +91 90139 97380… Continue reading இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.

மரைக்காயர்கள் யார் ??

சென்னையின் கோவளம் தொடங்கி குமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் வரை தமிழக முஸ்லிம்கள் கடற்கரையோரம் பரந்து விரிந்து கிடப்பதை பார்க்கின்றோம் இவர்களது வரலாறு 1200 ஆண்டுகளுக்கு பழமையானது இதில் பல்வேறு வரலாற்று உண்மைகள் அடங்கிக் கிடக்கின்றன. எவ்வாறு இவர்கள் கடற்கரையோரம் அடர்த்தியாக இருக்கின்றார்கள் என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் இஸ்லாத்தை போதிக்க வந்த தாபியீன்கள் மற்றும் தபோ தாபியீன்கள் அவுலியாக்களாக மாற்றப்பட்டனர். நாகூர் ஏர்வாடி சென்னை கோவளம் போன்ற தர்காக்களை நாம் பார்க்கலாம் ஒருகாலத்தில் மரக்கலங்களை உருவாக்கி பயணித்தவர்கள்… Continue reading மரைக்காயர்கள் யார் ??

செயின் பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சோழவந்தான் பகுதியில் கடந்த 23.09.2019-ம் தேதியன்று நடந்து சென்ற இரண்டு பெண்களிடம் நகையை பறித்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ரோந்து பணியை தீவிரப்படுத்தினார். குமாரம் பகுதி அருகே கொள்ளையர்கள் பைக்கில் வருவதை அறிந்த காவலர்கள் திரு.மூவேந்தன் மற்றும் திரு.காளிராஜ் ஆகியோர் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடிய… Continue reading செயின் பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டு

ஆந்திராவிலும் டாஸ்மாக்

இன்று முதல் மதுக்கடைகளை ஆந்திர அரசே ஏற்று நடத்தும் நிலையில் கடை திறப்பு நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி (இன்று) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் ஒரு கட்டமாக கிராம பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்கப்படும் சிறிய கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். ஆந்திராவில் 4,377 மது விற்பனை செய்வதற்கான… Continue reading ஆந்திராவிலும் டாஸ்மாக்